Naane Varuven M Logo Top

அந்த ஒரு போன் கால்.. 30 ஆயிரம் அடியில் பதறிய பயணிகள்..விமானத்தின் திக் திக் நொடிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஈரானில் இருந்து சீனா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த ஒரு போன் கால்.. 30 ஆயிரம் அடியில் பதறிய பயணிகள்..விமானத்தின் திக் திக் நொடிகள்..!

விமானம்

மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான ஈரானில் இருந்து சீனாவுக்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் சென்றிருக்கிறது. அந்த விமானம் இந்திய வான் பரப்பில் நுழைந்த நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் விமானத்தை தரையிறக்க முடிவு செய்திருக்கிறார். ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சீனா சென்ற இந்த விமானம் நேற்று காலை 9.20 மணியளவில் இந்திய வான்பரப்பிற்குள் நுழைந்தது. அப்போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

மிரட்டல்

இதனையடுத்து விமானத்தை டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க விமானி அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இருப்பினும் ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்க விமானிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த விமானி இதனை ஏற்கவில்லை.

சீறிப்பாய்ந்த ராணுவ விமானங்கள்

இந்நிலையில், இந்திய ராணுவத்தின் விமானப்படைக்கு இதுகுறித்து தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக இந்திய விமானப்படையில் உள்ள சில விமானங்கள் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தை பின்தொடர்ந்தன. மேலும், அந்த விமானத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த இந்திய போர் விமானங்கள், அவ்விமானம் இந்திய வான்பரப்பை கடக்கும் வரையில் பாதுகாப்பும் அளித்திருக்கின்றன. அதன்பின்னர் அந்த விமானம் திட்டமிட்டபடி சீனாவில் உள்ள Guangzhou விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில்,"அனைத்து நடவடிக்கைகளும் வகுக்கப்பட்ட நடைமுறையின்படி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (BCAS) ஆகியவற்றுடன் இணைந்து எடுக்கப்பட்டது. விமானம் இந்திய வான்பரப்பில் இருந்த நேரம் முழுவதும் விமானப்படையின் ரேடார் கண்காணிப்பில் இருந்தது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BOMB THREAT, IRAN, CHINA

மற்ற செய்திகள்