இலங்கையில் தோவலாயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் அண்ணாநகரில் உள்ள லூகாஸ் தேவலாயத்திற்கு சென்று இஸ்லாமியர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
இலங்கையில் ஈஸ்டர் புனித நாளன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்காரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கையில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் அண்ணாநகரில் உள்ள லூகாஸ் தேவலாயத்திற்கு சென்ற இஸ்லாமியர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
மேலும், 'தீவிரவாதம் என்றுமே எங்களின் ஓற்றுமையை குலைக்காது' என்ற பதாகைகளையும் தாங்கிய படி நின்றனர். இதன் மூலம் மதங்களை மீறிய மனிதநேயத்தை போற்றும் வகையில் இருந்த இஸ்லாமியர்களின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.