ரயில்வே ஸ்டேஷனுக்குள் இருந்த பிளாஸ்டிக் ட்ரம்.. கடுமையான துர்நாற்றம் வந்ததால் சந்தேகம்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
முகப்பு > செய்திகள் > இந்தியாரயில்வே ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ட்ரம் உள்ளே இளம்பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
பையப்பனஹள்ளி ரயில் நிலையம் நேற்று (திங்கட்கிழமை) வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் கடுமையான துர்நாற்றம் வருவதை சிலர் உணர்ந்திருக்கின்றனர். சற்று நேரத்தில் இந்த தகவல் மொத்த ஸ்டேஷன் முழுவதும் பரவியது. இதனையடுத்து நுழைவு வாயிலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டிரம்-ல் இருந்து தான் துர்நாற்றம் வருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
விசாரணை
காலை 10 - 11 மணியளவில் இந்த சம்பவம் நடக்கவே, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர். அப்போது ரயில்வே நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, திங்கள்கிழமை மூன்று பேர் டிரம்-ஐ ஆட்டோரிக்ஷாவில் ஏற்றிச் சென்று ரயில் நிலைய நுழைவாயில் அருகே வீசியதை போலீஸார் கண்டுபிடித்தனர். ஆந்திர மாநிலம் மச்லிப்பட்டினத்தில் இருந்து ரயிலில் உடல் கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், உயிரிழந்த பெண் யார்? என்பது இதுவரை காவல்துறையினரால் அறிவிக்கப்படவில்லை. மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு 31 - 35 வயது இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து விசாரிக்க காவல்துறை தனிப்படை அதிகாரிகள் ஆந்திர மாநிலம் மச்லிப்பட்டினத்திற்கு சென்றிருக்கின்றனர்.
3 சம்பவம்
கடந்த மூன்று மாதங்களில் பெங்களூரு ரயில் நிலையத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும். ஜனவரி 4 ஆம் தேதி, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் இளம் பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை ரயில்வே போலீஸார் கண்டுபிடித்தனர். துப்புரவு பணியாளர் ஒருவர் பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தபோது உடல் கண்டெடுக்கப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
அதேபோல, டிசம்பர் இரண்டாவது வாரத்திலும் SMVT ரயில் நிலையத்தில் சாக்கு பைக்குள் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக டிரம்மிற்குள் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்