‘அப்போ டீ மாஸ்டர்!’.. ‘இப்போ தொழிலதிபர்!’.. இவர நியாபகம் இருக்கா?.. ‘நடந்தது இதுதான்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

'chaiwala ' என்று அனைவராலும் அறியப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கான் என்பவர் சமூக வலைதளங்கள் வைரலானவர்.

‘அப்போ டீ மாஸ்டர்!’.. ‘இப்போ தொழிலதிபர்!’.. இவர நியாபகம் இருக்கா?.. ‘நடந்தது இதுதான்’!

சமூகவலைதளம் சிலரது வாழ்க்கை முறையே மாறி விடும் என்பதற்கு உதாரணமாகவும் மாறியுள்ளார். டீ க்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த அர்ஷத் கான் 2016 -ம் ஆண்டு ஜியா அலி என்பவர் எடுத்த புகைப்படம் ஒன்றின் மூலம் பிரபலமானார். அந்த புகைப்படம்தான் அவரது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றியது.

blue eyed pakistani chaiwala arshad khan becomes owner of a Cafe

அதற்கு காரணம் அவரது நீல நிற கண்கள்தான். அதனால் சமூக வலைதளங்களில் ஒரே நாளில் அவர் வைரலானதை அடுத்து அவருக்கு மாடலிங் வாய்ப்புகள் கிடைத்தன. இந்நிலையில் தற்போது இஸ்லாமாபாத்தில் சொந்தமாக கஃபே (‘Cafe Chaiwala Rooftop) ஒன்றை தொடங்கி இன்னும் வைரல் மேல் வைரலாகியுள்ளார் அர்ஷத் கான்.

blue eyed pakistani chaiwala arshad khan becomes owner of a Cafe

இதுகுறித்து பேசிய அர்ஷத் கான், பலரும் Chaiwala என்கிற பெயரை நீக்குமாறு  கூறுவதாகவும், ஆனால் தன்னால் அதை ஏற்க முடியவில்லை என்றும்,  அப்பெயர் தனக்கான அடையாளம் என்றும் தனது  கடையின் சிறப்பே அது பாரம்பரியமானது என்பதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்