1500 ரூபாய் 'காஸ்ட்லி' பிரியாணி... 35,056 வகைகள்... 4.60 கோடி ... 'ஷாக்' கொடுத்த இந்தியர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

StatEATics என்னும் பெயரில் ஸ்விக்கி நிறுவனம் ஜனவரி தொடங்கி நவம்பர் 30 வரை இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவு விவரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 4-வது ஆண்டாக இந்த அறிக்கையை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. சுமார் 530 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில், தொடர்ந்து 3-வது ஆண்டாக பிரியாணி நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது.

1500 ரூபாய் 'காஸ்ட்லி' பிரியாணி... 35,056 வகைகள்... 4.60 கோடி ... 'ஷாக்' கொடுத்த இந்தியர்கள்!

2019-ம் ஆண்டில் மட்டும் சுமார் 4.60 கோடி பிரியாணிகளை ஸ்விக்கி டெலிவரி செய்து இருக்கிறதாம். பிரியாணியில் மொத்தம் 35,056 வகைகள் இருக்கிறதாம். அதில் புனே நகரத்தில் கிடைக்கும் Chicken Sajuk Tup biryani தான் அதிக காஸ்ட்லியாம். இந்த பிரியாணியின் விலை 1500 ரூபாய் ஆகும். அதேபோல இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பிரியாணியில் முதலிடத்தை சிக்கன் போன்லெஸ் பிரியாணியும், அதற்கடுத்த இடங்களை சிக்கன் தம் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, வெஜ் பிரியாணி ஆகியவை பிடித்துள்ளன.

இந்த ஆண்டில் மிகவும் அதிகாலையான 6.07 மணிக்கு பொங்கல், இட்லி ஆகியவைகளை கோயம்புத்தூரில் ஸ்விக்கி டெலிவரி செய்துள்ளது. டெசர்ட் வகைகளில் குலோப் ஜாமூன் 17,69,399 முறையும், பலூடா 11,94,732 முறையும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. 3 லட்சம் கேக் வகைகள் வாடிகையாளர்களால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதில் பிளாக் பாரஸ்ட் கேக்கினை அதிகம் பேர் ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த டாப் உணவுகள்:

1. சிக்கன் பிரியாணி

2. மசாலா தோசை

3. பன்னீர் பட்டர் மசாலா

4. சிக்கன் பிரைடு ரைஸ்

5. மட்டன் பிரியாணி

6. சிக்கன் தம் பிரியாணி

7. வெஜ் ப்ரைடு ரைஸ்

8. வெஜ் பிரியாணி

9. தந்தூரி சிக்கன்

FOOD