“பிரச்சனை Uniform பத்தி.. பிகினி போட்டு போறது பத்தி இல்ல”.. Hijab விவகாரத்தில் பிரியங்கா காந்தி கருத்துக்கு குவியும் பதில்கள்
முகப்பு > செய்திகள் > இந்தியாசென்னை, 09, பிப்ரவரி 2022:-கர்நாடகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் சலசலப்பு உண்டானது.
ஹிஜாப் பிரச்சனை
இதனையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததை அடுத்து, இந்து மாணவர்கள் தாங்களும் காவி துண்டு அணிந்து வருவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மத ரீதியாக பிரச்சனை நிலவி வந்தது.
உருவெடுத்த பிரச்சனை..
அதன்பின் மாணவ, மாணவிகள் அனைவருமே பொதுவான பள்ளி சீருடைகளே அணிந்து வர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பல கல்லூரிகளில் பெரும் ஆர்ப்பாட்டம் உருவானது. மேலும், இதனிடையே இது குறித்த வழக்குகளும் எதிர்வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.
பிரியங்கா காந்தி
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்று தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பிகினி, தெரிவித்திருக்கிறார். ஒரு பிகினி, கூங்காட், ஜோடி ஜீன்ஸ் அல்லது ஹிஜாப் அல்லது எந்த ஆடையாக இருந்தாலும் தான் விரும்பும் உடைகளை அணிவதற்கு அந்த பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் மூலம் இந்த உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என சொல்லி இருக்கிறார். பிரியங்கா காந்தியின் இந்த கருத்துக்கு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது லைக்ஸையும் கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார்.
பிகினியிலோ விஷயம் ஹிஜாப் அணிவதை
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் நெட்டிசன்கள் பலரும், “பிகினியிலோ, கூங்காட்டிலோ, ஜீன்ஸிலோ பள்ளியில் அனுமதிப்பதில்லை. விஷயம் ஹிஜாப் அணிவதை பற்றி தான்.. எந்த பள்ளியில் பிகினி அனுமதிப்பார்கள்?” என்பன போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் பிரியங்கா காந்தியின் கருத்தை ஆதரித்தும் பேசி வருகின்றனர்.
மற்ற செய்திகள்