VIDEO: ‘கல்யாண ஊர்வலத்தில் பைக் வீலிங்’.. நொடியில் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமண ஊர்வலத்தின் போது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர் தவறி கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: ‘கல்யாண ஊர்வலத்தில் பைக் வீலிங்’.. நொடியில் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..!

கேரளாவில் மணமக்களை திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது மணமக்களின் நண்பர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்றுள்ளார். இருசக்கரத்தின் முன் சக்கரத்தை தூக்கியவாறு வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயலில் விழுந்தது.

இதனால் இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ACCIDENT, KERALA, BIKE, WHEELING, MARRIAGE