‘ரன்னிங்கில் பைக் தீப்பற்றியதை அறியாமல் குழந்தையுடன் சென்ற குடும்பம்’..போலீஸாரின் சமயோஜிதம்! பதறவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரப்பிரதேசத்தில் குழந்தையுடன், ஆண், பெண் உட்பட மூவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
விரைந்து சென்றுகொண்டிருந்த அந்த பைக்கில், திடீரென பின்புறமுள்ள எக்ஸாஸ்டர் மூலம் தீப்பிடிக்க தொடங்கியது. ஆனாலும் பைக்கில் தீப்பிடித்ததையும் அறியாமல் வாகன ஓட்டி தொடர்ந்து தனது வாகனத்தை இயக்கிக் கொண்டு இருந்துள்ளார். பைக்கின் பக்கவாட்டில் இருந்த பைகளும் எரியத் தொடங்கியுள்ளன.
பைக்கின் பின்புறம் வாகன ஓட்டியை, அடுத்து குழந்தையும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்த நிலையில் வாகனத்தில் தீப்பிடித்து இருந்ததே அறியாமல் மூவரும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர். எதிர்பாராதவிதமாக நெருப்பு பைக்கில் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் ஆடையில் பற்றி தீ பிடிப்பதற்கு முன்பே, ரோந்தில் இருந்த பேட்ரோல் போலீசார், இதனை கவனித்துள்ளனர்.
ஆனாலும் இந்த குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக போலீசார், வெகுதூரம் இந்த இருசக்கர வாகனத்தை ஷேர் செய்து அவர்களை மடக்கி இந்த தகவலை கூறி அவர்களை காப்பாற்றியுள்ளனர். போலீசார் செய்த இந்த காரியமும் பைக்கில் தீப்பிடித்தது அறியாமல் வெகுதூரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த தம்பதியருக்கு நேர்ந்த இந்த பதறவைக்கும் சம்பவமும் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவத்தில் வாகன ஓட்டி ஹெல்மெட் அணிந்திருந்தும் பைக்கின் மற்ற பாதுகாப்பு முறைகளை கவனிக்க தவறியதால் உண்டான இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் தங்கள் குடும்பத்தினரை இத்தகைய பேராபத்திலிருந்து காப்பாற்றும் விதமாக சிரத்தை எடுத்து தங்களை பின்தொடர்ந்து, சேஸ் செய்து காப்பாற்றிய போலீசாருக்கு இந்த குடும்பத்தினர் நன்றி கூறினர்.
#इटावा-PRV1617 आज 108 km से 112 की तरफ जा रही थी तभी एक बाइक सवार ने तेजी से क्रॉस किया जिसके पीछे बंधे बैग में आग लगी दिखाई दी जो तेजी से बढ़ रही थी,बिना कोई देर किए उस बाइक का 4 km पीछाकर रुकवा,बाइक सवार दंपत्ति को नीचे उतारकर आग बुझाया @Uppolice @UPGovt #SaveLife #HappyToServe pic.twitter.com/T2d6JiVGk7
— UP100 (@up100) April 14, 2019