Veetla Vishesham Mob Others Page USA

"நைட்ல அவன்கூட போன் பேசிட்டே இருக்கா.. என் மனைவி எனக்கு வேணும்".. போலீசுக்கு போன கணவர்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பக்காவான பிளான்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீஹார் மாநிலத்தில் பெண் ஒருவர் தனது காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக உறவினர்கள் கூறியிருப்பது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"நைட்ல அவன்கூட போன் பேசிட்டே இருக்கா.. என் மனைவி எனக்கு வேணும்".. போலீசுக்கு போன கணவர்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பக்காவான பிளான்..!

Also Read | "நான் என்ன கேட்டேன்.. நீங்க எதை அனுப்பிருக்கீங்க?".. ஆன்லைனில் உணவு ஆர்டர் செஞ்சது ஒரு குத்தமா? வைரல் வீடியோ.!

பீஹார் மாநிலத்தின் கைமுர் மாவட்டத்தில் உள்ளது மோக்ரி என்னும் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர் சில தினங்களுக்கு முன்னர் சடலமாக அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டார். ஆரம்பத்தில் அவரே தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், அவரது மனைவி தனது காதலருடன் இணைந்து தர்மேந்திராவை கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

எனக்கு என் மனைவி வேணும்

தர்மேந்திரா சமீபத்தில் பாபுவா காவல்நிலையத்திற்குச் சென்று புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தனது மனைவி அனில் என்பவருடன் இரவு நேரத்தில் அதிக நேரம் பேசுவதாகவும், தனக்கு மனைவி வேண்டும் எனக்கூறி புகார் அளித்திருக்கிறார் தர்மேந்திரா. இந்நிலையில், அனில் மற்றும் தர்மேந்திராவின் மனைவியை நேரில் வரவழைத்து பேசிய காவல்துறையினர் அறிவுரை கூறி, அப்பெண்ணை தர்மேந்திராவுடன் இணைந்து வாழுமாறு அனுப்பியுள்ளனர்.

Bihar women and his lover arrested for attacked his husband

இதனிடையே காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றதை அடுத்து அனில், தர்மேந்திராவை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், தர்மேந்திரா சடலமாக அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்.

வெளிச்சத்துக்கு வந்த உண்மை

இந்நிலையில், தர்மேந்திராவின் மகனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த அன்று தனது அம்மாவும், அனிலும் வீட்டுக்கு வந்து தனது தந்தையை தாக்கியதாக கூறியிருக்கிறார். மேலும், தனது அம்மா அனிலுடன் அடிக்கடி போனில் பேசி வந்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் அவர்.

இதுகுறித்து பேசிய பாபுபா காவல்நிலையத்தின் துணை காவல் ஆய்வாளர் கவுரவ் குமார்,"பாபுவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மோக்ரி கிராமத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உயிரிழந்தவரின் மனைவி அனிலுடன் தொடர்பு வைத்திருந்ததால், கொலை நடந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்றார்.

Also Read | "வெளிநாட்டுக்கு வேலைக்கு ஏஜெண்ட்-கிட்ட பணம் கொடுக்குறதுக்கு முன்னாடி இதையெல்லாம் செக் பண்ணுங்க"..சென்னை காவல்துறை கொடுத்த அட்வைஸ்..!

BIHAR, WOMAN, LOVER, ARREST, ATTACK, HUSBAND

மற்ற செய்திகள்