என்னங்க அதிசயமா இருக்கு... செமஸ்டர் தேர்வுல 100க்கு 151 மார்க் எடுத்த மாணவன்.. மொத்த காலேஜுமே ஷாக் ஆகிடுச்சு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீஹார் மாநிலத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வில் 100க்கு 151 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார் மாணவர் ஒருவர். இது அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என்னங்க அதிசயமா இருக்கு... செமஸ்டர் தேர்வுல 100க்கு 151 மார்க் எடுத்த மாணவன்.. மொத்த காலேஜுமே ஷாக் ஆகிடுச்சு..!

Also Read | பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு சென்ற 'பெண்'.. வெளிய வர்றப்போ லட்சாதிபதி.! தாறுமாறாக அடித்த 'அதிர்ஷ்டம்'!!

பொதுவாகவே கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள் மிகவும் பரபரப்பான நாளாக அமையும். சிலருக்கு மதிப்பெண்கள் குறைவாக வந்துவிடுமோ என்ற கவலையும், இன்னும் சிலருக்கு பாஸ் ஆகிவிடுவோமா என்ற அச்சமும் ஒரே நேரத்தில் எழும் அந்த நாளில். ஆனால், தங்களுடைய மதிப்பெண்களை விட தமது நண்பர்களின் மதிப்பெண்களையே முதலில் அறிந்துகொள்ளும் வழக்கம் மாணவர்களிடத்தில் அதிகம் இருக்கிறது. அப்படி, பீகாரை சேர்ந்த மாணவர் ஒருவரின் மதிப்பெண் பட்டியலை பார்த்த அவரது நண்பர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

அதிர வைத்த மதிப்பெண் பட்டியல்

பீகாரின் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் அம்மாநிலத்தின் தர்பங்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடந்து முடிந்த தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மாணவருக்கு அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 100க்கு 151 மதிப்பெண் எடுத்ததாக அந்த மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அந்த மாணவர்,"மதிப்பெண் பட்டியலை பார்த்தவுடன் நானும் எனது நண்பர்களும் திகைத்துப்போய்விட்டோம். இது தற்காலிக மதிப்பெண் பட்டியல் என்றாலும், முடிவை வெளியிடுவதற்கு முன்பு அதிகாரிகள் அதை சரிபார்த்திருக்க வேண்டும்" என்றார். அரசியல் அறிவியல் இரண்டாம் பகுதி 4 ஆம் தாளுக்கான தேர்வில் தான் இந்த மதிப்பெண் குளறுபடி நடந்திருக்கிறது.

Bihar student gets 151 out of 100 in Political Science exam

இன்னொரு மாணவர்

இதேபோல, பிகாம் பகுதி-2 தேர்வில் கணக்கு மற்றும் நிதி தாள்-4ல் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற மற்றொரு மாணவர், தேர்ச்சி பெற்றுள்ளதாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அந்த மாணவர்,"இது தட்டச்சு பிழை என்று பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது மற்றும் அவர்கள் எனக்கு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை வழங்கினர்" என்றார்.

இதுகுறித்து பேசிய பல்கலைக்கழகத்தின் தாளாளர் முஷ்டாக் அகமது," இரண்டு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் அச்சுப்பிழை இருந்தது. அவற்றை திருத்தி புதிய மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. இது சாதாரண அச்சுப்பிழை தான்" என்றார். இந்நிலையில், பீஹார் மாநிலத்தில்  ஒரு மாணவர் 100க்கு 151 மதிப்பெண் பெற்றதாக தகவல்கள் வெளியாகி அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | ஒரே வீட்ல 4 IAS, IPS .. இந்தியாவையே திரும்பி பார்க்க வச்ச சகோதர, சகோதரிகள்.. எல்லாத்துக்கும் அப்பா போட்ட "ஒரே கண்டிஷன்"தான் காரணம்..!

STUDENTS, BIHAR, POLITICAL SCIENCE EXAM, BIHAR STUDENT GETS 151 OUT OF 100

மற்ற செய்திகள்