அழையா விருந்தாளியாக கல்யாண வீட்டிற்கு போன கல்லூரி மாணவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. நெகிழ வைத்த சம்பவம்.
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில தினங்களுக்கு முன்பாக, MBA மாணவன் ஒருவர் அழைப்பு இல்லாத திருமண வீட்டிற்கு சென்று உணவருந்திய நிலையில், அதனை கண்டுபிடித்து அவரை பாத்திரம் கழுவ வைத்த விஷயம், கடும் சர்ச்சையை இந்திய அளவில் உண்டு பண்ணி இருந்தது.
Also Read | காதல் மனைவி மீது வந்த சந்தேகம்.. தாலி கயிறை வைத்தே கணவன் செஞ்ச பயங்கரம்.. உறைந்துபோன கிராமம்..!
அப்படி ஒரு சூழலில், தற்போது அதே போல ஒரு மாணவர் அழைப்பு இல்லாத திருமண வீட்டில் சாப்பிட போன நிலையில், மாப்பிள்ளை செய்த விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.
பீகாரின் பாகல்பூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் அலோக் யாதவ். இவர் தனது பசியை போக்குவதற்காக அப்பகுதியில் நடந்த திருமண விழா ஒன்றில் அழையா விருந்தாளியாகவும் அங்கே நுழைந்ததாக சொல்லப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், அங்கே பந்தியில் அமர்ந்து சாப்பிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், இன்னொரு முடிவையும் மாணவர் அலோக் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேடை ஏறி மணமக்களை மனதார வாழ்த்திய அலோக், அவர்களிடம் நான் அருகே உள்ள விடுதியில் தங்கி படித்து வருவதாகவும், அதிக பசியின் காரணமாக அழையா விருந்தாளியாக அங்கே வந்து வயிறார சாப்பிட்டு விட்டேன் என்றும் மனசாட்சி உறுத்தியதால் உண்மையை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி ஒரு சூழலில், மேடையில் இருந்த மாப்பிள்ளை செய்த விஷயம் தான் தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
அலோக் யாதவ் கூறியதை கேட்டு ரசித்த மணமகன் அதுல் ராஜக், உங்கள் விடுதிக்கும் சேர்த்து உணவை எடுத்து செல்லுங்கள் என அன்புடன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படி ஒரு அசத்தலான உபசரிப்பு கிடைத்ததால் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார் மாணவர் அலோக்.
மத்திய பிரதேசத்தில் நடந்த திருமண நிகழ்வில் அழையா விருந்தாளியாக போன மாணவரை பாத்திரம் கழுவ விட்ட சம்பவம், அதிர்வலைகளை உண்டு பண்ணிய சூழலில், தற்போது பீகார் மாநிலத்தில் அழையா விருந்தாளியாக வந்த மாணவருக்கு மாப்பிள்ளை கொடுத்த இன்ப அதிர்ச்சி அதிகம் வைரலாகியும் வருகிறது.
மற்ற செய்திகள்