Sanjeevan M Logo Top

20 வருசமா கல்லூரியில் பியூன் வேலை.. "இப்ப அதே கல்லூரி'ல".. கடின உழைப்பால் நிஜமான கனவு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக, சோஷியல் மீடியா தளங்களில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் அடிக்கடி வைரல் ஆவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

 

20 வருசமா கல்லூரியில் பியூன் வேலை.. "இப்ப அதே கல்லூரி'ல".. கடின உழைப்பால் நிஜமான கனவு!!

அவற்றில் பலவும் விதவிதமாக இருந்தாலும் சிலவற்றை நாம் கேள்விப்படும் போது, ஒருவிதமாக நம்மை இன்ஸ்பயர் செய்யும் வகையிலும் அமைந்திருக்கும்.

அப்படி ஒரு நபர் குறித்த செய்தி தான், தற்போது மக்கள் பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

பீகார் மாநிலம், பகல்பூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கமல் கிஷோர் மண்டல். இவருக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் அதே மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், கடந்த 2003 ஆம் ஆண்டு இரவு காவலாளியாக சேர்ந்து தனது பணியை தொடங்கினார். அப்போது அவருக்கு 23 வயதாக இருந்துள்ளது.

Bihar man work as peon in college for 20 years joined as professor

தனது பணத் தேவைக்காக இரவு நேர காவலாளியாக பணியை மேற்கொண்டு வந்த கமல் கிஷோர், அடுத்த சில மாதங்களில் வேறொரு கல்லூரியிலும் பியூன் ஆகவும் பணி அமர்த்தினார். முன்னதாக அரசியல் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றிருந்த கமல் கிஷோர், மீண்டும் தனது  படிப்பை தொடர வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தார்.

மேலும் தனது மேல் படிப்பைத் தொடர, கடந்த 2009 ஆம் ஆண்டு முதுகலை பட்டத்தை முடித்த கமல், 2017 ஆம் ஆண்டு தனது Ph.d படிப்பையும் முடித்துள்ளார். இதற்கு மத்தியில், தொடர்ந்து பியூன் வேலை பார்த்து வந்த கமல் கிஷோர், நெட் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருந்தார்.

Bihar man work as peon in college for 20 years joined as professor

ஒரு பக்கம் பியூன் வேலை, மறுபக்கம் படிப்பு என கமல் கிஷோரின் 20 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில், தற்போது அவரது கனவும் நிஜமாகி உள்ளது. 20 வருடங்கள் பியூனாக வேலை பார்த்த பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு ஆட்கள் எடுப்பதை அறிந்து அங்கே விண்ணப்பித்துள்ளார். தற்போது அதில் தேர்வாகி உள்ள கமல், சிந்தனை மற்றும் சமூகப் பணித் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பியூன் வேலையுடன் சேர்த்து தனது கனவை அடைய கடின உழைப்பை போட்டு வந்த நபருக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

BIHAR, MAN, WORK, PEON, COLLEGE, PROFESSOR

மற்ற செய்திகள்