கழுத்தில் QR code.. செல்போனில் UPI வாலட்.. டிஜிட்டல் யாசகம் பெறும் இந்த மனிதன் யார்?
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார்: பீகாரில் டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்று வரும் நபர் தற்போது இந்தியளவில் வைரலாகி வருகிறார்.
உன் ஹஸ்பண்ட் மேரேஜ் ஃபோட்டோ அனுப்புறேன், பாரு.. ஐயோ, இது என்னோடது.. மணமேடையில் வைத்து கைதான மணமக்கள்
இன்றைய நவீன காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து செயல்பாடுகளும் இணையத்தில் நடைபெற்று வருகிறது. வீட்டுக்கு தேவையான பொருட்கள், ஈ.பி. பில் போன் பில், துணிகள் வாங்குவது, சாப்பாடு ஆர்டர் செய்வது என எதற்கும் இனி நாம் சிரமப்பட தேவையில்லை. ஒரு கிளிக் செய்தால் வீட்டிற்கே வந்துவிடும்.
டிஜிட்டல் முறையில் யாசகம்:
இதற்கெல்லாம் மேலே ஒரு படி சென்று, பீகார் மாநிலத்தில் இருக்கும் பெட்டியா (Bettiah) ரயில் நிலையத்தில் டிஜிட்டல் முறையில் மக்களிடமிருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வரும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா:
40 வயதான ராஜு பட்டேல் தனது கழுத்தில் QR கோடு ஒன்றை அணிந்து கொண்டு டிஜிட்டல் பேமெண்ட் முறையை அவர் முன்னெடுத்துள்ளார். அதோடு ராஜு தன்னை முன்னாள் மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவின் தீவிர ஆதரவாளர் எனவும் கூறி வருகிறார். தான் இவ்வாறு டிஜிட்டல் முறையை பின்பற்றி யாசகம் பெற காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மீது வந்த ஈடுபாடு தான் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறும் ராஜு, 'இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
யாசகம் கொடுக்க மறுத்தனர்:
இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றார் போல நானும் மாறியுள்ளேன். அதனால் டிஜிட்டல் பேமெண்ட் முறையிலும் யாசகம் பெற்று வருகிறேன். நான் சிறு வயதிலிருந்து இதே ரயில் நிலையத்தில் யாசகம் பெற்று வருகிறேன். கடந்த சில காலமாக பலரும் எனக்கு யாசகம் கொடுக்க மறுத்து வந்தனர். கேட்டால் அவர்களிடம் சிறிய அளவிலான தொகை இல்லை என சொல்லி வந்தனர். அதோடு, இங்கு வரும் சில சுற்றுலா பயணிகள் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் கொடுப்பது மற்றும் பெறுவதாக சொல்லியிருந்தனர்.
அதனால் நானும் டிஜிட்டல் முறையை பின்பற்ற தொடங்கினேன். நான் இந்த ரயில் நிலையத்தில் தான் வாழ்ந்து வருகிறேன். தினமும் எனது வயித்து பசிக்கு தேவையான அளவுக்கு மட்டுமே யாசகம் பெறுகிறேன்' என சொல்கிறார். இந்த டிஜிட்டல் செயல்பாட்டிற்காக பாரத ஸ்டேட் வங்கியில் அவர் கணக்கு தொடங்கியுள்ளார் ராஜு.
மற்ற செய்திகள்