சுஷாந்த் வழக்கிற்காக 1800 கி.மீ டிராவல் செய்த... ஐபிஎஸ் அதிகாரியை கட்டாயமாக 'தனிமைப்படுத்திய' அதிகாரிகள்... வெளியான ஆதாரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த ஜூன் 14-ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்தற்கான காரணம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் காதலி ரியா தான் தன்னுடைய மகனின் மரணத்திற்கு காரணம் என சுஷாந்த் தந்தை பீஹார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.

சுஷாந்த் வழக்கிற்காக 1800 கி.மீ டிராவல் செய்த... ஐபிஎஸ் அதிகாரியை கட்டாயமாக 'தனிமைப்படுத்திய' அதிகாரிகள்... வெளியான ஆதாரம்!

புகாரின் அடிப்படையில் ரியாவை விசாரிக்க பீஹார் போலீசார் மும்பை சென்றனர். ஆனால் ரியா தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த வழக்கை விசாரிக்க பீஹார் போலீசார் வினய் திவாரி என்னும் ஐபிஎஸ் அதிகாரியை மும்பை அனுப்பி வைத்தனர். ஆனால் மும்பை போலீசார் கடந்த ஞாயிறு இரவு (நேற்று) வினய் திவாரியை கட்டாயமாக தனிமைப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பீஹார் டிஜிபி குப்தீஸ்வர் பாண்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். சுமார் 1800 கி.மீ பயணம் செய்து சென்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரியை மும்பை போலீசார் தனிமைப்படுத்தி உள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது இந்த வழக்கு மஹாராஷ்டிரா, பீஹார் என 2 மாநில மோதலாக உருவெடுக்க ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சுஷாந்த் வழக்கு விசாரணையில் தங்களுக்கு மகாராஷ்டிரா போலீசார் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் சுஷாந்த்சிங் தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுப்போம் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்