ஜெயிலில் திடீர் ஆய்வில் இறங்கிய அதிகாரிகள்.. பதட்டத்துல செல்போனை மறைக்க கைதி செஞ்ச காரியம்.. அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் செல்போனை விழுங்கியதாக சொல்லிய சிறை கைதி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | ஓடும் ரயிலில் வடமாநிலத்தவர் மீது தாக்குதல்.. வைரலான வீடியோவால் சிக்கிய நபர்.. திடுக் பின்னணி..!
பொதுவாக சிறைகளுக்குள் செல்போன், போதை பொருட்கள் உள்ளிட்டவை கைதிகளால் பயன்படுத்தப்படுகிறதா என அவ்வப்போது திடீர் ஆய்வில் சிறைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் பீகார் மாநிலத்தின் கோபால் கஞ்ச் பகுதியில் உள்ள சிறையில் ஆய்விற்காக அதிகாரிகள் சென்று இருக்கின்றனர். அப்போது சிறையில் இருந்த கைசர் அலி என்னும் இளைஞர் செல்போனை விழுங்கியதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே இதுகுறித்து சிறை நிர்வாக அதிகாரிகளிடத்தில் பேசி இருக்கிறார் அலி.
Images are subject to © copyright to their respective owners.
நடந்த விவரங்களை அவர் சொல்ல அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அவரை கோபால் கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் முடிவில் அவருடைய வயிற்றில் வித்தியாசமாக ஏதோ ஒரு பொருள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து பேசி உள்ள மருத்துவமனையின் அவசரப் பிரிவு மருத்துவர் சலாம் சித்திக்,"கைசர் அலி என்பவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரை செய்தோம். அதன் முடிவில் அவருடைய வயிற்றில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறோம். அவருக்கு மேற்கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட இருக்கின்றன." என்றார்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள கோபால்கஞ்ச் சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார், "சிறை அதிகாரிகளை அழைத்து என்ன நடந்தது என்பது குறித்து கைசர் அலி விவரித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
அவர் உடனடியாக கோபால் கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கைதி அலியின் எக்ஸ்ரேயில் அவரது வயிற்றில் வித்தியாசமாக ஏதோவொன்று இருப்பது தெரியவந்தது" என்றார்.
இதனையடுத்து கைசர் அலிக்கு பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலி, கடந்த 2020ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி, NDPS (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் கைசர் அலி தற்போது செல்போனை விழுங்கிவிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்