3 தலைமுறையா நடந்த வழக்கு.. 108 வருசத்துக்கு அப்புறம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு.. சுவாரஸ்ய பின்னணி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிகாரில் 108 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

3 தலைமுறையா நடந்த வழக்கு.. 108 வருசத்துக்கு அப்புறம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு.. சுவாரஸ்ய பின்னணி..!

பிகார் மாநிலம் கோலிவார் நகர பஞ்சாயத்து பகுதியில் தர்பாரி சிங் என்பவர் 1900-ம் ஆண்டு நாதுனி கான் என்பவரிடம் இருந்து 9 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இதனை அடுத்து 1911-ம் ஆண்டு நாதுனி கான் உயிரிழந்த நிலையில், அந்த இடங்களை அன்றைய பிரிட்டிஷ் அரசு கையகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக 1914-ம் ஆண்டு முதல் தர்பாரி சிங் சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

மூன்று தலைமுறையாக அந்த குடும்பத்தின் இந்த வழக்கின் சார்பாக ஆஜராகி வருகின்றனர். முதலில் தாத்தா சிவ்விரத் நாராயண் சிங், பின்னர், தந்தை பத்ரி நாராயண் அடுத்து, இறுதியாக மகன் சதேந்திரா சிங் வாதாடி இறுதியாக வெற்றி தேடி தந்துள்ளனர். இதனை அடுத்து 108 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பை மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஸ்வேதா சிங் நேற்று வழங்கினார்.

Bihar court delivers verdict in 108-old land dispute case

இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சொத்தை விற்ற நபர்கள் தற்போது யாரும் இந்தியாவிலேயே இல்லை. பிரிவினை காலத்தின் போது அவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அதனால் இந்த வழக்கின் விசாரணை 108 ஆண்டுகள் பிடிக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் சிங் உள்ளிட்ட பலரும் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது குறித்து இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8

Nenjuku Needhi Home
COURT, BIHAR

மற்ற செய்திகள்