"8 வருஷமா"... "264 கோடி செலவு செஞ்சு, கட்டுன பாலம்..." - ஓப்பன் பண்ண ஒரு மாசத்துல, இப்டி 'சல்லி சல்லி'யா உடைஞ்சு கெடக்கு...! - என்னதான் நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 264 ரூபாய் கோடி செலவில் சத்தர்காட் என்னும் பாலம் கட்டப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 16 ஆம் தேதி சத்தர்காட் பாலத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, பெரும் பண செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் திறக்கப்பட்ட ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றன. முன்னதாக, 2017 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் பாலங்கள் இது போன்று இடிந்து விழுந்த போது கேபினட் அமைச்சர் ஒருவர், எலிகள் பாலத்தின் அடியில் குழி தோண்டி ஓட்டை போட்டு பாலத்தின் அடித்தளங்களில் பலவீனங்களை ஏற்படுத்துகின்றன என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக எலிகள் மீது பழியை போட வேண்டாம் என பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்