வெறும் '6 ரூபாய்க்கு' அதிர்ஷ்டம் 'கூரையை' பிச்சிட்டு கொட்டிடுச்சே....! - கொண்டாட்டத்தில் 'துள்ளி' குதிக்கும் நபர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்காள மாநிலம் ஜாய் நகரைச் சேர்ந்தவர் பிரபீர் பிரமாணிக். நீண்ட நாட்களாக லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
61 வயதான பிரபீர் பிரமாணிக் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் தற்போது ஜாய்நகர் பஸ் டிராக்கர் அமைப்பில் ஒரு உறுப்பினராக உள்ளார். நெடும் காலமாக லாட்டரி வாங்குவதை ஒரு பழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், இதுவரை ஒரு ருபாய் கூட வென்றதில்லை. இருப்பினும், லாட்டரி சீட்டுகளை வாங்குவதை அவர் நிறுத்த முடிந்ததில்லை.
எத்தனை முயற்சி செய்தாலும், நிறுத்த முடியாமல் லாட்டரி வாங்குவதற்கு அடிமையாக மாறியுள்ளதாக தெரிவித்திருந்தார். வீட்டில் உள்ளவர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் பல வகையில் தொடர்ந்து எதிர்ப்பு வந்த நிலையிலும் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை எக்காரணத்தை கொண்டும் கைவிடவில்லை. காரணம், நெடுங்காலமாக லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்டவர் என்பதால் அதிகமான தொகையை இழந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் 6 ரூபாய்க்கு வாங்கிய சீட்டு மூலம் இவர் ஒரு கோடி ரூபாய் பணம் வென்றுள்ளார்.
ஒரு கோடி ரூபாய் வென்ற பிரபீர் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு மகிழ்ச்சியில் இருக்கிறார். இதைப்பற்றி தனது குடும்பத்தினருக்கு தெரிவித்த போது, அவர்களால் முதலில் உண்மை என நம்ப முடியவில்லை. குடும்பத்தில் இன்னும் சிலர் பிரபீர் பொய் பேசுகிறார் என்ற சந்தேகம் அடைந்தனர்.
லாட்டரியில் வென்ற பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சில திட்டங்களை தீட்டியுள்ளார். பணம் கிடைத்தவுடன் முதலில் தனக்கு இருக்கும் கடன் முழுவதையும் அடைக்க வேண்டும். பழையாதாக மாறியுள்ள வீட்டை புதிதாக மாற்ற வேண்டும்.
பல பழுது பார்க்கும் வேலைகள் நீண்டகாலமாக அப்படியே உள்ளது. மற்றும் முழுமையாக கட்டி முடியாமல் இருக்கும் வீட்டை கட்டி முடிக்க வேண்டும். அதனால் வீட்டுக்காக பெரிய ஒதுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், வீட்டுக்கு காங்கிரீட் தளத்தில் அல்லது உறுதியான மேட்டீரியல்கள் வைத்து 'புக்கா' எனப்படும் கூரை எழுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தினரின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்ற இருப்பதாகவும் திட்டமிட்டுள்ளார். இவர் தன் மனைவி, இரண்டு சகோதரர்களுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.
ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் வென்ற செய்தி காட்டுத்தீ போன்று அந்த பகுதியில் பரவத் தொடங்கியுள்ளது. எனவே, பணம் திருடு போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால், போலீசாரிடம் பாதுகாப்பு வழங்க கேட்டுள்ளார்.
மற்ற செய்திகள்