"கல்யாணமாகி இத்தன மாசத்துல என் பக்கத்துல கூட அவரு வரல..." 'புது' மனைவி முன்வைத்த 'குற்றச்சாட்டு'... 'அதிர்ச்சி' காரணம் சொன்ன 'கணவர்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்று, கடந்த ஓராண்டாக உலக மக்கள் அனைவரையும் ஒரு வழி செய்து விட்டது.
வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் பொது இடங்களில் சென்று வருவதையே அதிகம் தவிர்த்து வந்தனர். முகக்கவசம், கையுறைகள், சானிடைஸர், சமூக இடைவெளி என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான் மக்கள் வெளியே வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் பகுதியில், கொரோனா தொற்றின் மீதுள்ள பயத்தின் காரணமாக, சமூக இடைவெளியை அதிகம் கடைபிடித்த கணவரால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. போபால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து, திருமணமான நாள் முதலே, கொரோனா தொற்றின் மீதுள்ள பயத்தின் காரணமாக, தனது மனைவியிடம் இருந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வந்துள்ளார் அந்த கணவர். தன்னருகே கூட வரத் துணியாத தனது கணவருக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி அந்த பெண் தனது தாயார் வீட்டிற்கே திரும்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக, அந்த பெண் சட்ட ஆணையத்தில் புகாரளித்தார். தனது கணவர் தன்னுடன் உறவு கொள்ள விருப்பம் இல்லாமல் இருந்து வருவதாகவும், இதனால் அவருக்கு ஆண்மைக் குறைவு இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, விளக்கமளித்த கணவர், கொரோனா வைரஸ் மீதுள்ள பயத்தால் தான் மனைவியுடன் சமூக இடைவெளியை கடைபிடித்தேன் என்றும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், எந்த பிரச்சனையும் இல்லை என்ற முடிவுகள் வந்துள்ளது.
தன்னிடம் பேசும் போது கூட அவர் இடைவெளியை கடை பிடிக்கிறார் என அதிகாரிகளிடம் தெரிவித்த மனைவி, தனது மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் தன்னை அதிகம் துன்புறுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். கணவரிடம் பேசியும் இந்த விஷயத்திற்கு ஒரு தீர்வு காண முடியாது என்பதால் அவர் தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
இதன் பின்னர் அதிகரிகள் அந்த பெண்ணிற்கு அறிவுரை வழங்கி மீண்டும் கணவரின் வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளனர். கொரோனா தொற்றின் மீது அதிக பயத்துடன் இருந்த கணவர், தனது மனைவியின் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தி கொரோனாவை தடுக்குமா என அஞ்சுவதால் அவர் அப்படி செய்ததாக தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பின்னர், மனைவியின் குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அந்த கணவர் இன்னும் அதிகமாக பயந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்