'சாப்பாட்ட விழுங்க முடியல டாக்டர்...' 'எக்ஸ்ரே எடுத்து பார்த்தப்போ, உள்ள...' - அவர் சொன்ன பதிலை கேட்டு ஆடி போன மருத்துவர்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போபாலில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு பிரிவான காது-மூக்கு-தொண்டை துறை, 32 வயதான நபர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'சாப்பாட்ட விழுங்க முடியல டாக்டர்...' 'எக்ஸ்ரே எடுத்து பார்த்தப்போ, உள்ள...' - அவர் சொன்ன பதிலை கேட்டு ஆடி போன மருத்துவர்கள்...!

மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர் இரண்டு நாட்களாக தன்னால் எதையும் சாப்பிட முடியவில்லை என்றும் விழுங்கும் போது கடுமையான வலி ஏற்படுவதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

உடனடியாக ENT, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை குழுவால் அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டத்தில், அவரது கழுத்து மற்றும் மார்பில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில், கழுத்து பகுதியில் கத்தி மற்றும் ஒரு பேனா ரீபில் இருந்தது கண்டுபிடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவக்குழு உடனடியாக அவருக்குண்டான சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து நோயாளியிடம் விசாரித்த மருத்துவக்குழு, இரண்டு நாட்களுக்கு முன்பு சமையலறை கத்தியை விழுங்கியதாக கூறியுள்ளார். அவர் விழுங்கிய கத்தி சுமார் 14 செ.மீ நீளமும் 3.5 செ.மீ அகலமும் கொண்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ENT அறுவை சிகிச்சை குழுவுக்கு டாக்டர் விகாஸ் குப்தா டாக்டர் கணகல்யன் பெஹெரா, டாக்டர் ஷ்ரே மற்றும் டாக்டர் சந்தீபன் மற்றும் டாக்டர் பிரின்ஸ் ஆகியோருடன் தலைமை தங்கியுள்ளார். மயக்க மருந்து குழுவுக்கு டாக்டர் மனிதா, டாக்டர் அதிதி, டாக்டர் அகில், மற்றும் டாக்டர் ரியா ஆகியோருடன் டாக்டர் ரிதிகா தலைமை தாங்கி வெற்றிகரமாக அறுவைசிக்கிச்சையை முடித்துள்ளனர்.

இவர் மனநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மனநோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்ததாகவும், மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆல்கஹால், பீடி, குட்கா, கஞ்சா ஆகியவற்றிற்கும் அடிமையாக இருந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும் 2 வருடங்களுக்கு முன்னதாக இவர் விழுங்கிய சில பொருட்கள் அவரது வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்