இறந்துபோன தாத்தாவின் கடைசி ஆசை.. ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணமகன்கள்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் இறந்துபோன தாத்தாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக திருமணத்திற்கு ஹெலிகாப்டரில் பேரன்கள் இருவரும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இறந்துபோன தாத்தாவின் கடைசி ஆசை.. ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணமகன்கள்.. வைரலாகும் வீடியோ..!

                                Images are subject to © copyright to their respective owners.

மத்திய பிரதேசத்தின் குரானா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹேம் மற்றும் யாஷ் மாண்ட்லோய். இவர்கள் ஒருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடத்த குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஷுஜால்பூர் எனும் பகுதியில் இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. அப்போது மணமகன்கள் இருவரும் ஹெலிகாப்டரில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்திறங்கியுள்ளனர். இது அப்பகுதியினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாலும் இதற்கு பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது.

Bhopal cousins hire helicopter to fulfill grandfather wish

Images are subject to © copyright to their respective owners.

விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஹேம் மற்றும் யாஷ் மாண்ட்லோய். இருப்பினும் இவர்களது தாத்தா தனது பேரன்கள் திருமணத்தின்போது ஹெலிகாப்டரில் வந்திறங்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். இருப்பினும் வயது மூப்பு காரணமாக அவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்திருக்கிறார். ஆனாலும், தங்களது தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் ஈன முடிவெடுத்த ஹேம் மற்றும் யாஷ் மாண்ட்லோய் தாத்தா ஆசைப்பட்ட படியே ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்திருக்கின்றனர்.

சொல்லப்போனால் இவர்களது திருமணத்தில் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெறுவது இது முதல்முறை கிடையாது. முன்னதாக இதே குடும்பத்தை சேர்ந்த தேவேந்திர மாண்ட்லோய் என்பவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள மட்டனா கிராமத்தில் இவரது திருமணம் நடைபெற்றிருக்கிறது. அப்போது தேவேந்திர மாண்ட்லோய் ஹெலிகாப்டர் மூலமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றிருக்கிறார்.

Bhopal cousins hire helicopter to fulfill grandfather wish

Images are subject to © copyright to their respective owners.

இதுபற்றி மணமகன்கள் ஹேம் மற்றும் யாஷ் மாண்ட்லோய் பேசுகையில்," எங்களது தாத்தாவின் விருப்பம் இது. இப்பொது அவர் இல்லையென்றாலும் எங்களது அப்பா அதனை நிறைவேற்றியுள்ளார். அதேபோல, எங்களது குழந்தைகளுக்கும் திருமணம் செய்யும்போது இதேபோல ஹெலிகாப்டரில் மணமக்களை அழைத்து செல்வோம்" என்றனர். ஒருமுறை ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்க 5 - 6 லட்சம் ரூபாய் செலவு செய்வதாகவும் இருப்பினும் குடும்பத்தினரின் மகிழ்ச்சி காரணமாக இதனை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

WEDDING, HELICOPTER, MADHYAPRADESH

மற்ற செய்திகள்