மூக்கில் விடும் ‘சொட்டு மருந்து’.. கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ஒப்பந்தம் போட்ட இந்திய நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மூக்கு வழியாக விடும் சொட்டு மருந்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மிசோரில் உள்ள வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழத்துடன் இணைந்து இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் முக்கு வழியாக விடும் கொரோனா தடுப்பு மருந்தை ஹைதராபாத்தில் தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் அந்த பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகிய பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது.
கோவிஷீல்டு, ஸ்புட்நிக் போன்ற கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகள், ஊசிகள் மூலம் போடப்படுவதால் அதற்கான செலவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நேரடியாக மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து கண்டுபிடித்திருப்பதால் செலவு குறையும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூக்கு வழியாக விடப்படும் இந்த சொட்டு மருந்து கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது மட்டுமின்றி, செல்களில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வைரஸ் பரவும் மூக்கு மற்றும் தொண்டை பாதைகளில் மருந்து உடனடியாக செயல்படும் என்பதால் முதற்கட்டத்திலேயே வைரஸ் உடலுக்குள் பரவுவதை நிறுத்தி விடும் என சொட்டு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்