"அட.. இப்படி கூட Pay பண்லாமா..??".. சாலை ஓர டீ கடையில் இளைஞர் வெச்ச வைரல் போர்டு..
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்பு எல்லாம் நாம் ஏதாவது ஹோட்டல், மளிகை கடை அல்லது துணிக் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றால், நேரடியாக பணத்தை கொடுத்து தான் பொருட்களை வாங்கிக் கொள்வோம்.
ஆனால், டிஜிட்டல் யுகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் நிகழ்ந்து வருகிறது.
பெட்டிக் கடை தொடங்கி, பெரிய பெரிய ரெஸ்டாரண்ட்கள் வரை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் QR கோடுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பணத்தை கையில் எடுத்துக் கொண்டு போய், சில்லறை இல்லாமலோ அவதிப்படவும் வேண்டாம். என்ன தொகை என்பதை துல்லியமாக ஆன்லைன் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
இப்படி பணத்தை நேரடியாக கொடுத்த காலம் போய், ஆன்லைன் மற்றும் QR கோடுகள் வழி பண பரிவர்த்தனை நடந்து வரும் காலத்தில், இளைஞர் ஒருவர் டீக்கடையில் வைத்துள்ள போர்டு ஒன்று நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் இளைஞர் ஒருவர் சாலை ஓரத்தில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு "Frustrated Dropout" என பெயரிடப்பட்டுள்ள நிலையில், Paytm QR கோடுகளுக்கு மத்தியில் கிரிப்டோ கரன்சிகளும் இங்கே பண பரிவர்த்தனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என போர்டு ஒன்றை அந்த இளைஞர் வைத்துள்ளார்.
டீ குடித்து விட்டு, பண பரிமாற்றம் செய்ய கிரிப்டோ கரன்சிகள் ஏற்றுக் கொள்ளப்படும் என இளைஞர் வைத்துள்ள போர்டு பெங்களூரை தாண்டி, ஒட்டுமொத்த நாட்டையும் உற்றுக் கவனிக்க வைத்துள்ளது. மேலும், இந்த இளைஞரின் டீக்கடை புகைப்படத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த கடை குறித்து வெளியான தகவலின் படி, கிரிப்டோவை ஏற்கும் அந்த டீக்கடை உரிமையாளரின் பெயர் சுபம் சைனி என்பது தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் உள்ள மாரத்தஹள்ளியில் இந்த டீக்கடையை அவர் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 30,000 ரூபாயுடன் இந்த கடையை இளைஞர் சுபம் சைனி தொடங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, கொரோனா காலத்தில் ஊரடங்கால் சந்தை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக கிரிப்டோ கரன்சியால் பெரும் தொகையை சுபம் சைனி இழந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சாலை ஓரத்தில் டீக்கடை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர், பலரும் புரிந்து கொள்ளவே சிரமப்படும் கிரிப்டோ கரன்சியை பண பரிமாற்றத்திற்கு வைத்திருக்கும் தகவல், ஏராளமானோரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது தொடர்பாக பலரும் பல விதமான கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், க்ரிப்டோ கரன்சிகளை எப்படி அவர் சாதாரண பண பரிமாற்றத்திற்காக கணக்கிடுகிறார் என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
மற்ற செய்திகள்