"கிட்னி விற்பனைக்கு".. வீட்டு அட்வான்ஸ் கொடுக்க இளைஞர் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் கடைசி லைன்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக சமூக வலைத்தளங்களில் நாம் நேரத்தை உலவிடும் போது நம்மை சுற்றி நடைபெறும் விஷயங்கள் குறித்த செய்திகளை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

"கிட்னி விற்பனைக்கு".. வீட்டு அட்வான்ஸ் கொடுக்க இளைஞர் ஒட்டிய போஸ்டர்.. வைரலாகும் கடைசி லைன்!!

Also Read | "என் மனைவியும், உங்கள் கணவரும் திருமணம் செஞ்சுகிட்டாங்க".. பாதிக்கப்பட்ட கணவன் & மனைவி எடுத்த பரபரப்பு முடிவு

அது மட்டுமில்லாமல் இயல்பாக நடக்கும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடக்கும் விஷயங்கள் பெரிய அளவில் இணையவாசிகள் கவனம் பெற்று வைரல் ஆகவும் செய்யும். தற்போதும் அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தி தான் பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.

பெங்களூரில் உள்ள இந்திரா நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யாக் ஜெயின். இவர் அண்மையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் வித்தியாசமான வகையில் இருக்கும் விளம்பரம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் எனது இடது கிட்னியை விற்பனை செய்ய இருக்கிறேன் என்றும் வீட்டு வாடகை மற்றும் முன்பணம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Bengaluru poster for kidney sale viral among netizens

Images are subject to © copyright to their respective owners.

"கிட்னி விற்பனைக்கு"

மேலும் இந்த விளம்பரத்தின் கீழ், "கிண்டலுக்காக தான் சொன்னேன். எனக்கு இந்திரா நகர் பகுதியில் வீடு தேவைப்படுகிறது. என் ப்ரொஃபைலை QR கோடு ஸ்கேன் செய்து பாருங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வேடிக்கையாக குறிப்பிடப்பட்டிருந்த இந்த கிட்னி விற்பனை போஸ்டர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாக பலர் மத்தியிலும் பகிரப்பட்டும் வந்தது. பலரும் பல விதமான கருத்துக்களையும் அந்த விளம்பரத்தை பற்றி தெரிவித்தும் வந்தனர்.

Bengaluru poster for kidney sale viral among netizens

Images are subject to © copyright to their respective owners.

பெங்களூரில் உள்ள நிலை

அப்படி இருக்கையில், தான் வீடு தேடி வரும் பகுதியில் வீட்டின் உரிமையாளர்கள் அதிக முன்பணம் கேட்பதாகவும், அதனை ஜாலியாக குறிப்பிட தான் கிட்னி விற்பனைக்கு என வைத்ததாகவும் ரம்யாக் ஜெயின் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு லட்ச ரூபாய் வரை கேட்பதால் கிட்னி விற்கும் சூழலும் வரலாம் என்பதை தான் அவர் அப்படி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Also Read | ஸ்டார்க் கையில் உருவான காயம்?... கிரிக்கெட் போட்டிக்கு நடுவே பரபரப்பு!!.. ஆனாலும் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

BENGALURU, POSTER, KIDNEY SALE, POSTER FOR KIDNEY SALE

மற்ற செய்திகள்