'டிராஃபிக்கின் போது சாலைகளில்'... 'ஹாரன் அடிச்சா கிரீன் சிக்னல் விழாது!'... 'போக்குவரத்து காவல்துறை அதிரடி!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிராஃபிக்கில் அதிக நேரம் ஹாரன் அடித்தால், நீண்ட நேரம் காத்திருக்கும் செயல்முறை அமல்படுத்தப்பட உள்ளது.

'டிராஃபிக்கின் போது சாலைகளில்'... 'ஹாரன் அடிச்சா கிரீன் சிக்னல் விழாது!'... 'போக்குவரத்து காவல்துறை அதிரடி!'...

கடந்த வாரம், மும்பை போலீஸார் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். அதில், சாலை நெரிசலால் சிக்னலில் காத்திருக்கும் வேளையில் நீண்ட நேரம் ஹாரன் அடித்தால் ரெட் சிக்னலில் இருந்து க்ரீன் சிக்னல் மாறாமல் இருக்கும் செயல்முறையை அமல்படுத்தப்போவதாக குறிப்பிட்டிருந்தது.

குறிப்பிடப்பட்ட ஒலி அளவைக் கடந்து, போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினால், ரெட் சிக்னல் மட்டுமே இருக்கும். கிரீன் சிக்னலுக்கு மாறாது. அந்த ஒலி அளவு தற்போதைக்கு 85 டெசிபெல் (decibel) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மும்பை போலீஸ் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தை, பெங்களூர் போலீஸும் அமல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து பெங்களூர் நகர காவல் ஆணையர் பேசுகையில், "மும்பையைப் போல் பெங்களூரில் ஹாரன் சத்தம் பெரும் பிரச்சனையாக இல்லாத போதிலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சாலைகளில் ஒலி மாசுவை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

 

 

TRAFFIC, MUMBAI, BENGALURU