இந்தியாவில் உதயமான புது Bus Stand.. இங்கிருந்து போக மனசே வராது போலயே! எங்க இருக்கு?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் சகல வசதிகளுடன் ஒரு பேருந்து நிறுத்தம் உருவாக்கப்பட்டுள்ள சூழலில் இது தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உதயமான புது Bus Stand.. இங்கிருந்து போக மனசே வராது போலயே! எங்க இருக்கு?

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | யப்பா நம்ம உமேஷ் யாதவா இது?.. அடுத்தடுத்து பறந்த சிக்ஸர்கள்.. விராட் கோலி ரியாக்ஷனை பாருங்க 😅.. வீடியோ..!

பொதுவாக ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது என்றால் அதில் பயணிகள் அமர்வதற்கும், சற்று இளைப்பாறவும் வசதியாக இருக்கும் வகையில் அமைந்திருக்கும். பேருந்து வரும் வரை அங்கே காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், அங்கே ஏராளமான வசதிகள் இருந்தால் அவை எப்படி இருக்கும்.

அப்படி சில வசதிகளின் கூடிய பேருந்து நிறுத்தம் தான் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் விமான நிலையம் அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் நவீன வசதி கொண்டதாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றின் எதிரே இந்த பேருந்து நிறுத்தமும் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, சானிட்டரி நாப்கின் விற்பனை மிஷின், ஸ்மார்ட் குப்பை தொட்டி மற்றும் ஸ்னாக்ஸ் பொருள் விற்பனை செய்யும் கருவி என பல்வேறு விஷயங்கள் இந்த பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

Bengaluru new smart bus stop with more facilities attract passengers

Images are subject to © copyright to their respective owners.

இங்குள்ள குப்பைத் தொட்டி சுமார் 70% நிரம்பிய உடனே எச்சரிக்கை வழங்க தொடங்கிவிடும் என கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இங்குள்ள குப்பையை அகற்றும் தூய்மை பணியாளருக்கும் மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே போல அங்கு இருக்கும் திரை ஒன்றில் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகள், அவற்றின் வழித்தடம் மற்றும் பயண நேரம் உள்ளிட்ட முக்கிய தகவல்களும் இடம் பெற்றிருக்கும். மேலும் இந்த பேருந்து நிறுத்தத்தை சுற்றி பசுமையாக இருக்கும் உணர்வை வழங்கும் விதமாக செடிகள் மற்றும் புல் தரைகளும் நிறுவப்பட்டிருக்கின்றன.

இதனால் நிச்சயம் இந்த பேருந்து நிறுத்தம் ஒரு புதிய அனுபவத்தை அங்கு வரும் பயணிகளுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் பலர் குறிப்பிடுகின்றனர். சிசிடிவி கேமரா உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Electronics City Industrial Township Authority -ன் கீழ் இந்த பேருந்து நிறுத்தம் தயார் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "கிரிக்கெட்டோட தீர்க்கதரிசிங்க இவரு? 😅".. தினேஷ் கார்த்திக் சொன்ன அடுத்த பந்தில் நடந்த அற்புதம்.. வைரல் வீடியோ!!

BENGALURU, BUS STOP, BENGALURU NEW SMART BUS STOP, PASSENGERS

மற்ற செய்திகள்