பெங்களூரு: பரபரப்பான சாலையில் பணமழை..!! ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய நபர்... வைரலாகும் வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரில் ஒரு பரபரப்பான சாலைக்கு மத்தியில் நபர் ஒருவர் செய்த செயல் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பெங்களூரு: பரபரப்பான சாலையில் பணமழை..!! ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய நபர்... வைரலாகும் வீடியோ

நம்மைச் சுற்றி நடக்கும் வினோதமான அல்லது அதிர்ச்சி நிறைந்த பல்வேறு விஷயங்கள் பெரிய அளவில் வைரல் ஆவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட செய்திகள் பெரிய அளவில் இணையத்தை ஆக்கிரமித்து வரும் சூழலில், தற்போது அப்படி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தான் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் படி பெங்களூரு பகுதியில் பரபரப்பான கே.ஆர். மார்க்கெட் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வருகை புரிந்ததாக தெரிகிறது. அப்போது அங்கே உள்ள மேம்பாலத்தின் அருகே நின்றபடி அந்த நபர் பத்து ரூபாய் நோட்டுத் தாள்களை வீசி எறிந்து அங்கிருந்த மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கருப்பு நிற கோட் அணிந்தபடியும் கடிகாரத்தை உடையில் தைத்தபடியும் வந்த நபர் பணத்தை வீசியிருந்த நிலையில் ரூபாய் தாள்களை எடுக்கவும் அப்பகுதியில் இருந்த மக்கள் முண்டியடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அங்கே போக்குவரத்து நெரிசலும் திடீரென உருவாக சிறிது நேரம் பரபரப்பான நிமிடங்களும் அங்கே அரங்கேறி இருந்தது.

Bengaluru man throws currency note in busy roads viral video

யார் என்று தெரியாத நபர் இப்படி பணத்தை வீசி எறிந்த நிலையில் அதனை எடுப்பதற்காக வாகனத்தில் வந்தவர்களும் கூட இறங்கி முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, அடுத்த சில நிமிடங்களிலேயே இணையத்தில் அதிகம் வைரலான நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்ததாகவும் தெரிகிறது.

Bengaluru man throws currency note in busy roads viral video

போலீசார் வருவதற்கு முன்பாகவே அந்த நபர் அங்கிருந்து கிளம்பிச் சென்ற சூழலில் சுமார் 3000 ரூபாய் வரை அவர் பத்து ரூபாய் தாளாக பறக்க விட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றது. படத்தில் வரும் காட்சியைப் போல இந்த சம்பவம் அங்கே அரங்கேறி இருந்த நிலையில், அந்த நபரையும் போலீசார் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

MONEY, BENGALURU

மற்ற செய்திகள்