"எப்புட்றா.." வெறும் பத்தே செகண்ட்ல உணவு டெலிவரி! எப்படி சாத்தியமாச்சு.? வியக்கும் நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல நகர பகுதிகளில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்து உண்ணும் பழக்கம் பலர் மத்தியில் அதிகரித்து வருகிறது.

"எப்புட்றா.." வெறும் பத்தே செகண்ட்ல உணவு டெலிவரி! எப்படி சாத்தியமாச்சு.? வியக்கும் நெட்டிசன்கள்

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நான் அவுட்டானது பிரச்சனை இல்ல, அசிம் வெளிய வந்திருந்தா எனக்கு செருப்படி தான்".. பிரபல போட்டியாளரின் அப்பா சொன்ன விஷயம்!!

இதற்கு காரணம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகிற்கு மத்தியில் தாங்களும் பிஸியாக இருப்பதன் காரணத்தினால் நேராக உணவகம் சென்று உண்பதை விட ஃபோனில் ஆர்டர் செய்தால் அது தங்களை தேடி வரும் என்பதால் இதனை பலரும் பின்பற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக நாம் வெளியே செல்லும் போது பல உணவு டெலிவரி நிறுவனங்களின் ஊழியர்கள் சாலையில் அதிகமாக செல்வதையும் நாம் கவனிக்க முடியும்.

அது மட்டுமில்லாமல், அவ்வப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் குறித்தும் அவர்களை சுற்றி நடக்கும் பல்வேறு வித்தியாசமான விஷயங்கள் குறித்துமான செய்திகள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாவதையும் நாம் கவனித்திருப்போம். இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் உணவு டெலிவரி தொடர்பாக நடந்துள்ளது.

Bengaluru food delivery within 10 seconds people in awe

Images are subject to © copyright to their respective owners.

பொதுவாக ஒருவர் உணவு ஆர்டரை டெலிவரி செய்ய குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். அதுவும் பெங்களூர் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரமும் நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி இருக்கையில், பெங்களூரில் தான் ஒரு உணவு டெலிவரி வெறும் 10 வினாடிகளுக்குள் நடந்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த காலேப் ஃப்ரீசன் என்ற நபர் பெங்களூரில் வசித்து வருகிறார். நள்ளிரவில் அவர் மெக்டொனால்ட் உணவை சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் பெங்களூரில் கோரமங்களா பகுதியில் உள்ள மெக்டொனால்டு நிறுனவத்திற்கு சென்றுள்ளார்.

Bengaluru food delivery within 10 seconds people in awe

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் நள்ளிரவு ஆகிவிட்டதால் கடை மூடப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. உணவகம் ஒரு பக்கம் மூடப்பட்டிருந்தாலும் டெலிவரி பாய்கள் உணவை வாங்கிக் கொண்டிருப்பதை கவனித்த காலேப் ஃப்ரீசன், ஸ்விகி மூலம் அந்த மெக்டொனால்டில் இருந்து உணவை ஆர்டர் செய்துள்ளார். மேலும் அவர் உணவகத்திற்கு அருகிலேயே இருந்ததால் அங்கேயே கொடுத்து விடும்படியும் செயலியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உணவை சஞ்சய் என்ற டெலிவரி பாய் பிக்அப் செய்து வாசலிலேயே நின்ற காலேப் ஃப்ரீசன் கையில் கொடுக்க வெறும் பத்தே வினாடியில் இந்த டெலிவரி நடந்து முடிந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இது தொடர்பான நிகழ்வை தனது சமூக வலைத்தளங்களில் காலேப் பகிர்ந்துள்ளார்.

Also Read | "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்".. 35 வருட காதல் மனைவிக்காக பைக்கில் கணவர் ஒட்டிய ஸ்டிக்கர்!!

BENGALURU, FOOD DELIVERY, ONLINE FOOD ORDER

மற்ற செய்திகள்