'பைக், செல்போன் தான் முக்கியம் என...' '3 மாசம் ஆன பெத்த குழந்தைய...' - கல் நெஞ்சம் கொண்ட தந்தை செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் 3 மாத குழந்தையை விற்று செல்போன் மற்றும் பைக் வாங்கிய தந்தையை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (29.08.2020) அன்று மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தையை மீட்டுள்ளனர்.
பெங்களூருவில் பிறந்த 3 மாத குழந்தை ஒன்று சொந்த தந்தையின் மூலம் கர்நாடகா சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள தினகல் கிராமத்தில், குழந்தை இல்லாத தம்பதிக்கு சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். பண்ணை தொழிலாளியான 3 மாத குழந்தையின் தந்தை குழந்தையை விற்ற பணத்தில் 15,000 ரூபாய்க்கு செல்போன் மற்றும் 50,000 ரூபாய்க்கு பைக்கும் வாங்கியுள்ளார்.
மேலும் குழந்தை பிறந்த மருத்துவமனையின் உதவியுடனே 3 மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்த உடனே அவரின் தந்தை குழந்தையை விற்பதற்கு முயற்சி எடுத்ததாகவும், அதையடுத்து விழிப்புடன் இருந்த மருத்துவமனை அதிகாரிகளின் உதவியுடன் தற்போது குழந்தை மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக குழந்தையின் சத்தம் கேட்காததால் சந்தேகமடைந்து மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியுள்ளனர்.
மேலும் தன் கணவரின் செயலை வெளியே சொன்னால் தன்னை கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாக குழந்தையின் தாய் கூறியுள்ளார். தற்போது மீட்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மற்ற செய்திகள்