கொரோனாவால் 'பாதிக்கப்பட்ட' நபரை வழியனுப்ப... 'திரண்ட' கூட்டம்... நாடு முழுவதும் 'வெடித்த' சர்ச்சை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் கொரோனா வைரஸ் உறுதியான நிலையில், ஆம்புலன்சில் ஏறுவதற்கு முன் தன்னுடைய தொண்டர்களிடம் கையசைத்து கொண்டு பெண் ஒருவரின் காலிலும் விழுந்து கொண்டு பின் ஆம்புலன்ஸ் ஏறிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் 'பாதிக்கப்பட்ட' நபரை வழியனுப்ப... 'திரண்ட' கூட்டம்... நாடு முழுவதும் 'வெடித்த' சர்ச்சை!

பெங்களூர் பகுதி படராயணபுரா பகுதியிலுள்ள கவுன்சிலர் இம்ரான் பாஷா என்பவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை அன்றிரவு மருத்துவமனை வந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இம்ரான் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை காலையில் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து அவரை அழைத்துள்ளனர். அப்போதும் தாமதித்த இம்ரான், சிறிது நேரம் கழித்து ஆம்புலன்சில் ஏற முற்பட்ட போது அவரது வீட்டின் அருகே அவரது ஆதரவாளர்கள் கூடி கோஷமிட ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைவரிடம் கையசைத்து விடைபெற்ற இம்ரான், அங்கிருந்த பெண்மணி ஒருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கி பின் ஆம்புலன்சில் ஏறி சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ, இணையதளங்களில் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், சமூக விலகலை கடைபிடிக்காமல் பிறருக்கு தொற்று ஏற்படும் வகையில் நடந்து கொண்ட இம்ரான் பாஷா மீது போலீசார் சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வைரசின் ஆபத்து குறித்து உணராமல் நபர் ஒருவர் செய்த செயல் மிகப்பெரிய விவகாரமாக உருவாகியுள்ளது.

 

மற்ற செய்திகள்