VIDEO: 'வாவ்... நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுர மாதிரி ஒரு குத்து!'... 'காவல்துறை அதிகாரிகளின்' இந்த நடனம் எப்படியிருக்கு?!'... 'வைரல்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாமன அழுத்தத்தைக் குறைப்பதற்காக காவல் துறையினர் ஜும்பா நடனம் ஆடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் 750 காவல் துறை அதிகாரிகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், ஜும்பா நடனமாடினர். மூத்த அதிகாரிகள் உட்பட, அணிக்கு 25 நபர்கள் வீதம் 30 அணிகளாக பிரிந்து இந்த நடன பயிற்சியை மேற்கொண்டனர்.
இது குறித்து, பெங்களூரு வடகிழக்கு காவல் துறை துணை ஆணையர் கூறுகையில், "இந்த நடனப் பயிற்சியானது மன அமைதியையும், அதிகார பேதமின்றி சக காவல்துறையினருடன் பழகும் தன்மையையும் அளிக்கிறது" என்றார்.
மேலும், இதில் சிறப்பாக நடனமாடிய காவல் துறை ஊழியர்களுக்குப் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு காவல் துறையினர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Rhythmic stress buster - Zumba program for Police personnel of North-East Division.#ನಮ್_ಪವರ್ 🎵🎶🎵🎶 pic.twitter.com/UaQGYzjQZn
— BengaluruCityPolice (@BlrCityPolice) February 20, 2020
Video Credit: TOI