"கார் எல்லாம் இல்ல".. மெட்ரோ ரயிலில் கல்யாணத்துக்கு போன மணப்பெண்.. வைரல் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது இணையத்தில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து நிறைய செய்திகளை பார்க்க நேரிடும்.
அதிலும் சற்று வித்தியாசமாக இருக்கும் செய்திகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகவும் செய்யும். அதே போல, இயல்பாக இருக்கும் சம்பவத்தில் இருந்து சற்று மாறுபட்டு வினோதமாக நடப்பவை தொடர்பான வீடியோக்கள் தான் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி பலரையும் வியப்படைய வைக்கும்.
அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பொதுவாக, பெங்களூர் நகரில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே தான் இருக்கும். வேறு ஊர்களில் இருந்து பெங்களூர் செல்லும் பலரும் டிராபிக் காரணமாக அவதிப்பட்டு பல்வேறு கருத்துக்களை இணையத்தில் தெரிவிப்பதை கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். இதனால், பெங்களூர் என்றாலே அங்குள்ள போக்குவரத்து நெரிசல் குறித்த விஷயங்கள் தான் பலருக்கும் டக்கென நினைவு வரும்.
அப்படி இருக்கையில், பெங்களூரில் உள்ள மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக காரில் குடும்பத்தினருடன் சென்றதாக தெரிகிறது. ஆனால் செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சிக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனால், முகூர்த்த நேரத்திற்குள் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று சேர்வதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில், அந்த மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து வேறொரு முடிவை எடுத்துள்ளனர். அதன்படி, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரத்திற்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக காரை அங்கே நிறுத்தி விட்டு மெட்ரோ ரயிலில் மண்டபம் நோக்கியும் மணப்பெண் குடும்பத்தினருடன் புறப்பட்டுள்ளார்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் மணப்பெண் சிரித்துக் கொண்டிருக்கும் வேளையில், ரயிலுக்குள்ளும் சிரித்த முகத்துடனே குடும்பத்தினருடன் அவர் பயணம் செய்கிறார். திருமண நாளில் மணப்பெண் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து திருமணம் நடக்கும் இடத்திற்கு சென்று சேர்ந்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.
பொதுவாக, காரில் தங்களின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என நினைக்கும் சூழலில், இந்த மணப்பெண் மெட்ரோ ரயிலில் கூட சென்று சேரலாம் என்பதை உணர்த்தி செய்துள்ள இந்த விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்