Michael Coffee house

'பிடெக் படிச்சதெல்லாம் இதுக்குத்தானா?... 'சொன்னது ஒரே ஒரு பொய்'... 'சுருட்டியது 80 லட்சம்'... கதிகலங்க வைத்துள்ள பொறியியல் மாணவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாம் படிக்கும் படிப்பு சமுதாயத்திற்கும் மற்றவர்களுக்கும் நல்ல விதத்தில் பயன்பட வேண்டும். ஆனால் ஒரு பொறியியல் மாணவர் அதை வைத்துச் செய்துள்ள மோசடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பிடெக் படிச்சதெல்லாம் இதுக்குத்தானா?... 'சொன்னது ஒரே ஒரு பொய்'... 'சுருட்டியது 80 லட்சம்'... கதிகலங்க வைத்துள்ள பொறியியல் மாணவர்!

தெலுங்கானா மாநிலம் பீர்பூர் மண்டலத்தைச் சேர்ந்த பார்லா லக்ஷ்மி நாராயணா என்ற மாணவர், மூன்றாம் ஆண்டு பிடெக் தொழில்நுட்பம் படித்து வந்துள்ளார். இவர் மோசடி மூலம் சுருட்டிய பணம் ஒரு லட்சம், இரண்டு லட்சம் அல்ல. 80 லட்ச ரூபாய். பார்லா லக்ஷ்மி நாராயணா தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்டு அரசு வேலைக்குத் தயாராகி வரும் மாணவர்களைச் சந்தித்து உங்களுக்கு அரசுப் பணி வாங்கி தருகிறேன் என லாவகமாகப் பேசியுள்ளார்.

தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் காட்டிக் கொள்ள லக்ஷ்மி நாராயணா தனக்கு ஒரு ஓட்டுநரையும், தனிப்பட்ட உதவியாளர் ஒருவரையும் நியமித்துள்ளார். எங்குச் சென்றாலும் அவர்கள் இருவருடன் செல்லும் லக்ஷ்மி நாராயணா, காண்போரைத் தான் ஒரு ஐ.ஏ.எஸ் என்றே நம்பவைத்துள்ளார். இவ்வாறு 29 பேரிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறி 80 லட்ச ரூபாயைச் சுருட்டியுள்ளார்.

BE Student allegedly duped several people and earned Rs 80 lakh

அந்த பணத்தின் மூலம் இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு வீட்டை வாங்கினார் லக்ஷ்மி நாராயணா. 3-5 லட்ச ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஏமாற்றிய அவர், அரசு வேலைக்காக 3 லட்ச ரூபாயைக் கொடுத்து ஏமாந்த இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் லக்ஷ்மி நாராயணா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்