"பாத்தா 'மொதிரா' கிரௌண்ட்ல தான் மேட்ச் பார்க்கணும்..." 'புகைப்படத்தை' வெளியிட்டது 'பி.சி.சி.ஐ'... "சுத்தி பாக்கவே '2 நாள்' ஆகும் போல..."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

"பாத்தா 'மொதிரா' கிரௌண்ட்ல தான் மேட்ச் பார்க்கணும்..." 'புகைப்படத்தை' வெளியிட்டது 'பி.சி.சி.ஐ'... "சுத்தி பாக்கவே '2 நாள்' ஆகும் போல..."

இதுவரை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் இருந்து வந்தது. தற்போது, அதை விட பெரிய மைதானம் ஒன்று இந்தியாவின் அகமதாபாத் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. மொதிரா (Motera) என பெயரிடப்பட்டுள்ள இந்த மைதானத்தை பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் இணைந்து வரும் 24ம் தேதி திறந்து வைக்க உள்ளனர்.

அன்றைய தினம் இந்த மைதானத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள அந்த மைதானத்தில், 'நமஸ்தே டிரம்ப்' எனும் பெயரில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தற்போது அந்த மைதானத்தை வானில் இருந்து எடுத்த புகைப்படத்தை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த கிரிக்கெட் மைதானத்தை நேரில் பார்க்க ஆர்வமாக இருப்பதாக ரசிர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

MOTERA, GUJARAT, AHMEDABAD, LARGEST CRICKET GROUND, MODI, TRUMP, NAMASTE TRUMP