பிப்ரவரி மாதத்தில், நாட்டின் அனைத்து வங்கிகளும் 8 நாட்கள் மூடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 2 சனிக்கிழமைகளில், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்பட உள்ளன. பிப்ரவரி 21ம் தேதி மகா சிவராத்திரி என்பதால், அன்றும் வங்கிகள் மூடப்படும்.
பிப்ரவரி மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் பின்வருமாறு:
பிப்ரவரி 8 - மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை
பிப்ரவரி 9 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 16 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 21 - மகா சிவராத்திரி
பிப்ரவரி 22 - மாதத்தின் நான்காம் சனிக்கிழமை
பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை
மேற்குறிப்பிட்டுள்ள விடுமுறை நாட்கள், மத்திய அரசின் விடுமுறை நாட்கள் என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இவை பொருந்தும். அது தவிர, விடுமுறை தினங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடலாம். மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சிறப்பு விடுமுறை தினங்கள் இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளை அணுகி இந்த மாதத்தின் சிறப்பு விடுமுறை தினங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதத்தின் இரண்டு மற்றும் நான்காம் வார சனிக்கிழமைகள், அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.