'கூகுள் பேயில் 300 அனுப்பிய நபர்...' 'கொஞ்சம் நேரத்தில வந்த ஒரு மெசேஜ்...' 'அக்கவுண்ட்ல இருந்து ஒரு லட்சம் ரூபாய் அபேஸ்...' - என்ன நடந்தது...?
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில் கூகுள்பே மூலம் நண்பருக்கு 300 ரூபாய் பணம் அனுப்பி ஒரு லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூர் அரகெரே பகுதியில் வசித்து வரும் நாகபூஷண் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தன் நண்பருக்கு கூகுள்பே (google pay) மூலம் ரூபாய் 300-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் தன் நண்பருக்கும் போய் சேரவில்லை, மேலும் இவரது கணக்கில் திரும்ப வராமல் இருந்துள்ளது.
இதன் காரணமாக கூகுள் மூலம் தேடி கூகுள்பே வாடிக்கையாளர் மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நண்பருக்கு அனுப்பிய ரூ.300 கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார்.
மறுபக்கம் பேசிய மர்ம நபர் தங்களால் கண்டிப்பாக உதவ முடியும் எனக்கூறி, நாகபூஷண் அவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பும்படி கூறியுள்ளார்.
நாகபூஷண் அவர்களும் அனைத்து விவரங்களையும் அனுப்பிய உடன் ஒரு மணிநேரத்தில் உங்களது 300 ரூபாய் திருப்பி செலுத்தப்படும் என கூறிய மர்ம நபர் போனை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் 300 ரூபாய் வந்துவிடும் என நினைத்த நாகபூஷணுக்கு சில நிமிடங்களில் வந்த மெசேஜில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நாகபூஷண் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நாகபூஷண் புகார் அளித்துள்ளார்.
போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்களை இணையதளத்தில் வெளியிட்டு பொது மக்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் சமீப காலங்களில் அதிகரித்து வருவதால் நாம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமாகிறது.
மற்ற செய்திகள்