"37 ஆயிரம் கோடி இழப்பா?".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா?'.. புலம்பும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐடி மற்றும் வணிக நிறுவனங்களின் அலுவலகங்களுக்காக கமர்ஷியல் பில்டிங்குகளை குத்தகைக்கு விடுபவை REIT எனும் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் நிறுவனங்கள்.
இந்த நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஐடி மற்றும் வணிக நிறுவனங்கள் அலுவலகங்களை இயக்கி வந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்றால் ஊழியர்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து பணிபுரிவதால், REIT நிறுவனங்களுக்கு அடுத்த 12 மாதங்களுக்குள் 37 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் குறிப்பாக, பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. தங்களது பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதால், ஆபீஸ் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரியும் ஊழியர்கள் குறைவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இவ்வாறு வீட்டில் இருந்து பணிபுரிய முடியும் எனும்போது இனியும் அப்படியே தொடர்ந்தால் அலுவலகத்திற்கென ஆகும் செலவுகள் குறையும் என்பதால், பல பெரிய நிறுவனங்கள், லாக்டவுனுக்கு பிறகும் இவ்வாறு தொடர முடிவு செய்கின்றன.
மற்ற செய்திகள்