'என்ன இது OTP நம்பர் வந்துகிட்டே இருக்கு...' 'மொபைல் ஆப்ல டிக்கெட் புக் பண்ணிட்டு...' 'பேங்க் அக்கவுண்ட் போய் செக் பண்ணினா...' - அதிர்ச்சியில் உறைந்து போன நபர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி செல்போன் செயலியைப் பயன்படுத்தி பெங்களூரில் இருந்து  திருவனந்தபுரம் செல்ல விமான டிக்கெட் புக் செய்துள்ளார். அப்போது அவர் வங்கிக்கணக்கில் இருந்து, ஏழு லட்சம் ரூபாயை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

'என்ன இது OTP நம்பர் வந்துகிட்டே இருக்கு...' 'மொபைல் ஆப்ல டிக்கெட் புக் பண்ணிட்டு...' 'பேங்க் அக்கவுண்ட் போய் செக் பண்ணினா...' - அதிர்ச்சியில் உறைந்து போன நபர்...!

இதுகுறித்து டிசம்பர் 31-ம் தேதி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு பேசிய போது, தீபக் குமார் சர்மா என்ற நபர் பேசி தொழில்நுட்பச் சிக்கலினால் ஏற்பட்ட பிரச்சனையினால் எடுக்கப்பட்ட தொகையைத் திருப்பித் தர முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் முதியவரின், வேறொரு வங்கிக் கணக்கு எண்ணைத் தருமாறு கேட்டு, வங்கிக் கணக்கின் கடைசி நான்கு எண்களை மட்டும் தெரிவித்துள்ளார். அதையடுத்து பல 'OTP' அவரின் எண்ணுக்கு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெரியவர், வைட்ஃபீல்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்