'ஐடி கம்பெனிகளில் உருவாகும் மிகப்பெரிய மாற்றங்கள்...' - வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஊழியர்களின் கருத்துக்கணிப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா ஊரடங்கால் பெங்களூரில் இயங்கும்  தகவல் தொழில்நுட்ப அலுவலங்களில் மிக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

'ஐடி கம்பெனிகளில் உருவாகும் மிகப்பெரிய மாற்றங்கள்...' - வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஊழியர்களின் கருத்துக்கணிப்பு...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ளது என சொன்னால் அது மிகையாகாது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஐ.டி துறைகளில் பின்பற்றப்படும் ஒர்க் ஃப்ரம் ஹோம் மிக சிறந்த உதாரணம். மேலும் பல தேசிய நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்ற ஊக்குவிப்பதால் பெங்களூருவில் செயல்படும் பல நிறுவனங்கள் தங்களின் பணி கலாச்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றை மாற்ற எண்ணி வருகின்றனர்.

பெங்களூரு நன்கு அறியப்பட்ட பிரபலமான ஐ.டி பூங்காக்களில் தற்போது 5-15% ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மேலும் மற்ற ஊழியர்கள் எப்போது அலுவலகங்களுக்குத் திரும்புவார்கள் என்பது கேள்விக்குறியே.

மேலும் ஐ டி துறையில் கொடிகட்டி பறக்கும் தகவல் தொழில்நுட்ப மையமான டாடா கன்சல்டன்சி சர்வீஸின் 69 ஏக்கர் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவில், 55,000 ஊழியர்களில் 5-7% பேர் மீண்டும் பணியில் உள்ளனர். சுமார் 100,000 ஊழியர்களைக் கொண்ட மன்யாட்டா தூதரகம் வணிக பூங்காவில், ஐபிஎம் மற்றும் காக்னிசன்டில் சுமார் 15,000 பேர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பெங்களூரு ஐடி நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளின் விலை அதிகமாகி கொண்டே வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும், ஐ டி ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தே பணிபுரிய விரும்புகின்றனர் என்ற சர்வே வெளிவந்துள்ளது. இதில் சுமார் 80% சிஸ்கோ ஊழியர்களும், 90% க்கும் மேற்பட்ட இன்போசிஸ் லிமிடெட் மற்றும் விப்ரோ லிமிடெட் ஊழியர்களுக்கு WFH-க்கு விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் கூகிள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் அனுப்பிய மின்னஞ்சலில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை பரிந்துரைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மிக பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தற்போது மிக அதிக ஏக்கர் கொண்ட வளாகங்களில் மிக குறைந்த ஊழியர்களை கொண்டு பணி நடத்துவது லாபத்தின் சரிவுக்கு வழிவகுக்கும் என்றே கருதுகின்றனர். இதன் காரணமாக சில நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களின் உட்கட்டமைப்பை மாற்றும் ஆலோசனையிலும் உள்ளனர் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்