My India Party

'பென்சன் வாங்கிட்டு வர்றேன்னு கெளம்பி போன பாட்டி...' '9 மாசம் கழிச்சு வீடு திரும்பிருக்காங்க...' - இடையில என்ன நடந்துச்சு...?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரில் இருந்து ஓய்வூதியம் வாங்க வந்த 83 வயது பாட்டி 9 மாதங்களுக்குப் பிறகு பல  தற்போது தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

'பென்சன் வாங்கிட்டு வர்றேன்னு கெளம்பி போன பாட்டி...' '9 மாசம் கழிச்சு வீடு திரும்பிருக்காங்க...' - இடையில என்ன நடந்துச்சு...?

பெங்களூரை சேர்ந்த 83 வயது பூபத்தி அம்மாள் பாட்டி கடந்த மார்ச் மாதம் ஓய்வூதியம் பெற தமிழகம் வரத் திட்டமிட்டுள்ளார். ஆனால் தவறுதலாக, விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார்.  விசாகப்பட்டினம் சென்று சேர்ந்த பிறகுதான் தவறான ரயிலில் ஏறியதை கண்டுபிடித்துள்ளார். மேலும் அவருக்கு ஏற்பட்ட மொழி பிரச்சனையால் தமிழகத்துக்கு வருவதற்கு பதில், மீண்டும் தவறான ரயிலில் ஏறி சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தரை சென்றடைந்தார்.

பாட்டிக்கு கன்னட மொழி மட்டுமே தெரிந்திருந்ததால், யாரிடமும் உதவி கேட்கவோ, அவருக்கு பொதுமக்கள் யாரும் உதவி செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது. சமூக ஆர்வலர்கள் மூலம் பாட்டியின் நிலை அறிந்த மாவட்ட நிர்வாகம் கன்னடம் தெரிந்த ஒருவரை அழைத்து வந்து, அவரைப் பற்றி தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார்  பஸ்தர் மாவட்ட ஆட்சியர் ரஜத் பன்ஸால்.

மேலும் பொதுமுடக்கம் காரணமாக பாட்டியின் உறவினர்களை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பூப்பத்தி பாட்டி யாரிடமும் எதுவும் பேசாமல், எப்போதும் அழுதுகொண்டே இருந்தார். இங்கிருந்த சூழ்நிலையை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதையடுத்து பாட்டியிடம் இருந்த மிகவும் சேதமடைந்த ஒரு காகிதத்தில் சில செல்போன் எண்கள் இருந்துள்ளன. அந்த எண்களும் தெளிவாக இல்லாத நிலையில், பல சமூக ஆர்வலர்கள், தங்களது செல்லிடப்பேசிகளில் தொடர்ந்து அந்த எண்களை வேறு வேறு எண்களுடன் சேர்த்துப் போட்டு, அழைப்பை மேற்கொண்டு, அந்த மூதாட்டியின் உறவினரைக் கண்டுபிடித்துக் கொடுத்தனர்

பாட்டியின் பேரன் செந்திலிடம் பேசி சட்டீஸ்கருக்கு வந்திருப்பது குறித்து அறிந்ததும் செந்தில் கடும் அதிர்ச்சியடைந்தார். பொதுமுடக்கம் காரணமாக முதியோர் இல்லத்தில் இதுநாள்வரை அவரை பத்திரமாக வைத்திருந்தனர்

ஆனால், விசாகப்பட்டினத்தில் இருந்து எப்படி சட்டீஸ்கர் வந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை என்கிறார் பஸ்தர் மாவட்ட ஆட்சியர் ரஜத் பன்ஸால்.

அவர் மார்ச் மாதம் இங்கு வந்த சேர்ந்து, அவரது விவரங்களை அறிவதற்குள் அவரது குடும்பத்தினரால், அவரது ரயில் பயணத்துக்கு பணம் அனுப்ப முடியாத நிலையில், மாவட்ட நிர்வாகமே அவரை திரும்ப அனுப்பும் செலவை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

அந்த மூதாட்டியிடம் மிகவும் சேதமடைந்த ஒரு காகிதத்தில் சில செல்லிடப்பேசி எண்கள் மட்டுமே இருந்தன. அதுமட்டுமே அவரிடம் இருந்த ஒரே துப்பு, அவரது உறவினர்களைக் கண்டுபிடிக்க. அந்த எண்களும் தெளிவாக இல்லாத நிலையில், ஒருவழியாக சமூக ஆர்வலர்களின் உதவியினால் பாட்டியின் உறவினரை கண்டுபிடிக்க முடிந்தது.

மற்ற செய்திகள்