ஒரு கோடி பரிசா...! எனக்கா...? 'கொஞ்ச நேரத்துல வந்த அடுத்த போன்கால்...' இப்படி நடக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல...' - உச்சக்கட்ட ஷாக்கான பாட்டி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சியில் பணப் பரிசு விழுந்துள்ளது என 62 வயது பாட்டியை ஏமாற்றி சுமார் ரூ. 9.3 லட்சத்தை ஏமாற்றியுள்ளனர் ஆன்லைன் திருடர்கள்.

ஒரு கோடி பரிசா...! எனக்கா...? 'கொஞ்ச நேரத்துல வந்த அடுத்த போன்கால்...' இப்படி நடக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல...' - உச்சக்கட்ட ஷாக்கான பாட்டி...!

கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி பெங்களூரு வித்யாரண்யபுராவைச் சேர்ந்த 62 வயதான பாட்டி ஒருவருக்கு பிரபல தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த தொலைபேசி உரையாடலின் போது பேசிய பெண்மணி ஒருவர் பாட்டியின் பெயருக்கு சுமார் ரூ. 25 லட்சம் வென்றதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பாட்டி சந்தோச வெள்ளத்தில் முழ்கியுள்ளார். அதன் பின் சில மணி நேரம் கழித்து பாட்டி அதே பெண்மணி போன் செய்து பரிசுத் தொகை ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகையை கோருவதற்கு முன்கூட்டியே வருமான வரி உட்பட சில கட்டணங்களை அவர் செலுத்த வேண்டும் என சொல்லி ரூ. 9.25 லட்சத்தை தன் வங்கிக்கணக்கிற்கு அனுப்புமாறு கூறினார்.

1 கோடிக்கு ஆசைப்பட்ட பாட்டி ரூ .9.25 லட்சத்தையும் அனுப்பியுள்ளார். இதையடுத்து தான் செய்த பரிவர்த்தனைகளை குறித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூறியபோது தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்த புகார் தற்போது சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்