15 லட்சம் கடன் வேணுமா...? வேண்டாமா...? 'அப்போ நாங்க சொல்றத பண்ணுங்க...' '2-வது தடவ கேட்டப்போவே சுதாரிச்சுருக்கணும்...' தினுசு தினுசா ஏமாத்துறாங்க...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தை பயன்படுத்தி மோசடி கும்பல் ஒன்று பெங்களூரில் சுமார் ரூ.79,400 வரை ஏமாற்றியுள்ளனர்.

15 லட்சம் கடன் வேணுமா...? வேண்டாமா...? 'அப்போ நாங்க சொல்றத பண்ணுங்க...' '2-வது தடவ கேட்டப்போவே சுதாரிச்சுருக்கணும்...' தினுசு தினுசா ஏமாத்துறாங்க...!

இந்தியாவில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேற்கொள்வோரின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி PMMY எனப்படும் முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்கள், விவசாயம் அல்லாத சிறு மற்றும் மைக்ரோ நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி பெற முடியும். எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெங்களூரு பிராசர் டவுனைச் சேர்ந்த அஃப்ரூஸ் என்பவர் தான் ஆரம்பிக்கும் தொழிலுக்கு கடன் பெற பிரதமர் மோடி PMMY எனப்படும் முத்ரா யோஜனா திட்டம் மூலம் கடன் பெற முயற்சித்துள்ளார்.

சைபர் கொள்ளையர்கள் இணையத்தில் PMMY எனப்படும் முத்ரா யோஜனா திட்டம் குறித்த போலியான விளம்பரத்தையும், லிங்க்கையும் பரப்பியுள்ளனர். அஃப்ரூஸ் அந்த லிங்க்க்கை கிளிக் செய்தவுடன் e-Mudra அப்ளிகேஷனுக்கு சென்றுள்ளது. இதையடுத்து ரூ.4,500 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுள்ளது. இதைச் செலுத்திய பிறகு ரூ.15 லட்சம் கடன் பெற ஒப்புதல் கிடைத்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், உரிய ஆவணங்களை சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அதன்பிறகு ரூ.75,000 செலுத்தினால் தான் கடனுதவி கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அஃப்ரூஸ்ஸும் இதுதான் நடைமுறை என நம்பி இணையத்தில் பணத்தை செலுத்தியுள்ளார்.

அதன் பிறகும் சுமார் ரூ.64,000 செலுத்த வேண்டும் என்று அந்த லிங்க்கில் கேட்டதால் அஃப்ரூஸ் அதிர்ச்சி அடைந்து, தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து உடனே போலீசிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தனது பணத்தை மீட்டுத் தருமாறும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்