'வாட்டர் டேங்கில் சிதைந்து கிடந்த பெண் உடல்...' 'சிக்கிய கடிதத்தில் தெரிந்த மரணத்திற்கான காரணம்...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில் 49 வயது பெண்மணி தன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் நீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில், எலஹங்கா நியூ டவுனில் இருக்கும் எஸ்.எம்.ஐ.ஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கௌரி நாகராஜ் என்னும் 49 வயது பெண்மணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என கணவர் நாகராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கௌரி நாகராஜ் வசிக்கும் எஸ்.எம்.ஐ.ஜி அடுக்குமாடி குடியிருப்பின் குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அபார்ட்மென்ட் குடியிருப்பாளர்கள், பிளம்பரை ஏற்பாடு செய்து தொட்டியில் இறங்கும் போது நீர் தொட்டியில் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கௌரி அவர்களின் சடலத்தை மீட்டு, முதலில் தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து வெளிவந்திருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, கௌரி ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என்றும், வீட்டு மனைகள் வாங்கி தருவதாக கூறி பலபேரிடம் இருந்து பணம் வாங்கி, ஜெயசூர்யா டெவலப்பர்களுக்கு பணம் கொடுத்துள்ளார் எனகூறப்படுகிறது. ஆனால் ஜெயசூர்யா பில்டர்ஸ் குடியிருப்பு மனைகளை வழங்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் கௌரியை ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலைக்கு முன்பு கௌரி நாகராஜ் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன்படி, தற்கொலைக் குறிப்பில் இருக்கும் இரண்டு நபர்கள் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (வடகிழக்கு) பீமாஷங்கர் எஸ் குலேட், 'இது நிதி பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை வழக்கு. ஜெயசூர்யா டெவலப்பர்களின் கோபி, பார்கவ் மற்றும் தேவராஜப்பா ஆகியோர் கௌரி அவர்களின் தற்கொலைக்கு காரணமானதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் தற்கொலைக் குறிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பெண் தனது தற்கொலைக் குறிப்பில் அவர் டெவலப்பர்களுக்கு கொடுத்த பணம் குறித்த விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் சந்தேக படும்படியான அனைத்து நபர்களையும் வரவழைத்து விசாரிப்போம் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்