பாகுபலி சமோசா-வா? என்ன இப்டி இருக்கு??.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. சுவாரஸ்ய பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபரபரவென நாம் வெளியே எங்காவது இயங்கிக் கொண்டிருக்கும் போது, வெளியே ஏதாவது தேநீர் கடையில் சென்று ஒரு டீயோ காபியோ அருந்தலாம் என தோன்றும்.
அப்படி, நாம் டீ குடிக்கும் போது, சூடாக ஒரு பஜ்ஜியோ அல்லது சமோசாவோ உண்ண கூட மனசு சற்று அலைப்பாயும்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் உள்ள கடையொன்றில் அசத்தலான திட்டம் ஒன்றை போட்டு வைத்துள்ளார் அதன் உரிமையாளர். இதற்காகவே, பலரும் அந்த கடைக்கு சென்று வருகிறார்கள்.
"பாகுபலி சமோசா"
அதாவது, சுமார் 8 கிலோ அளவில் சமோசா ஒன்றை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சமோசாவை 30 நிமிடத்தில் உண்டு முடிக்கும் நபருக்கு 51 ஆயிரம் ரூபாய் பரிசாகவும் வழங்கப்படும் என்றும் அந்த உரிமையாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் பேசுகையில், "நான் சற்று வித்தியாசமாக எதையாவது செய்து சமோசா என்ற வார்த்தையை செய்திகளில் வர வைக்க வேண்டும் என யோசித்தேன். இதனால் "பாகுபலி சமோசா" என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்தோம். முதலில் நாங்கள் நான்கு கிலோ சமோசாவை உருவாக்கினோம். தற்போது, எட்டு கிலோ சமோசாவை உருவாக்கி உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
யாருமே சாப்பிடல..
இந்த எட்டு கிலோ பாகுபலி சமோசாவை உருவாக்க, சுமார் 1100 ரூபாய் வரை செலவாகி உள்ளது. இந்த பாகுபலி சமோசாவிற்குள் உருளைக்கிழங்கு, பழங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. "இதுவரை இந்த பாகுபலி சமோசாவை உண்ணும் சவாலில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. பலரும் இதை உண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், அதனை முடிக்கும் வரையிலான அளவு வரை அவர்களால் செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக 10 கிலோ சைஸில் சமோசா ஒன்றை உருவாக்க நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்" என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்த கூட்டம்..
அது மட்டுமில்லாமல், பாகுபலி சமோசாவின் காரணமாக தனது கடையில் இப்போது ஏராளமான வாடிக்கையாளர் வரத் தொடங்கும் நிலையும் உருவாகி உள்ளதாக அதன் உரிமையாளர் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள ஏராளமான பகுதிகளில் இருந்துள்ள Food Bloggers பலரும் பாகுபலி சமோசாவை முயற்சி செய்வதற்காக அந்த கடைக்கும் வந்து செல்கிறார்கள்.
மீரட் பகுதியிலுள்ள கடை ஒன்றில், உருவாக்கபட்டுள்ள பாகுபலி சமோசாவின் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்