பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட... பாபர் மசூதி இடிப்பு வழக்கில்... நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி உட்பட அனைவரும் விடுதலை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட... பாபர் மசூதி இடிப்பு வழக்கில்... நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் இன்று வழங்கப்படுவதை அடுத்து, தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு இன்று வாசிக்கப்பட்டது. அதில், "குற்றத்தை நிரூபிக்க வலுவான சாட்சியங்கள் இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை" என்று நீதிபதி கூறியுள்ளார்.

இதன் காரணமாக, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்