18 வயசுல 'பிரதமரையே' தேர்ந்தெடுக்கலாம்...! வாழ்க்கை துணையை தேர்தெடுக்க முடியாதா...? 'ரொம்ப தப்புங்க...' - ஓவைசி காட்டம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண்களின் திருமண வயதை உயர்த்தியதற்காக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

18 வயசுல 'பிரதமரையே' தேர்ந்தெடுக்கலாம்...! வாழ்க்கை துணையை தேர்தெடுக்க முடியாதா...? 'ரொம்ப தப்புங்க...' - ஓவைசி காட்டம்...!

இந்தியாவில் இதற்கு முன் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21ஆகவும் இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன் பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-க்கும் உயர்த்தும் வரைவை மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சட்டப்படி இனி பெண்களின் திருமண வயது 21ஆகும். இதனை மீறி யாராவது திருமணம் செய்து வைக்க முயன்றாலோ அல்லது செய்து கொண்டாலோ அந்த திருமணம் சட்டப்படி செல்லாது.

இந்நிலையில், இந்த முடிவை வரவேற்றும் விமர்சித்தும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர். மேலும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, '18 வயதில், ஒரு இந்திய குடிமகன் / குடிமகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், தொழில் தொடங்கலாம், பிரதமரைத் தேர்வு செய்யலாம். எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால் திருமணம் செய்து கொள்ள மட்டும் 21 வயதை ஏன் நிர்ணயிக்க வேண்டும். இது மத்திய அரசின் தவறான முடிவு. என்னை பொறுத்தவரை ஆண்களுக்கான திருமண வயது வரம்பயே 21 என்பதிலிருந்து 18 ஆக குறைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்' எனக் கூறினார்.

பெண்களின் திருமண வயதை அதிகரித்தது பெண்களுக்கு சாதகமாக அமைவது போல ஆண்களின் வயதை குறைக்கும் திட்டமும் நன்றாக இருக்கிறது என பலர் சமூகவலைத்தளங்களில் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

AZAD OWAISI, MARRIAGE, AIMIM, WOMEN, AGE, ஓவைசி, திருமண வயது, பிரதமர், மணமகன், PM

மற்ற செய்திகள்