"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டாரா பாபா ராம்தேவ்?".. பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு கண்டுபிடித்துள்ளதாக கூறும் மருந்தை விளம்பரப்படுத்துவதை நிறுத்துமாறு மத்திய அரசு கூறியுள்ளது.

"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டாரா பாபா ராம்தேவ்?".. பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

பாபா ராம்தேவுடன் தொடர்புடைய 'பதஞ்சலி' நிறுவனம் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறி 'கொரோனில் மற்றும் ஸ்வாசரி' என்ற பெயரில் சந்தையில் விற்பனையைத் தொடங்கி இருக்கிறது. மேலும், இந்த மருந்து ஏழு நாட்களுக்குள் கொரோனாவை 100% குணப்படுத்திவிடும் என்றும் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக பாபா ராம்தேவ், "நாங்கள் இன்று கொரோனா மருந்தை அறிமுகப்படுத்துகிறோம். இவற்றில் இரண்டு சோதனைகளை நாங்கள் நடத்தினோம். இந்த ஆய்வு டெல்லி, அகமதாபாத் எனப் பல நகரங்களில் நடந்தது. மொத்தம் 280 நோயாளிகள் சோதிக்கப்பட்டதில் 100 சதவீதம் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸையும் அதன் சிக்கல்களையும் இதனால் கட்டுப்படுத்த முடிந்தது" என்று கூறினார்.

இந்நிலையில், மத்திய அரசின் 'ஆயுஷ்', இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் வெளியிட்டுள்ள கொரோனா ஆயுர்வேத மருந்துகள் பற்றிய செய்திகளை மத்திய அமைச்சகம் அறிந்திருக்கிறது. அந்நிறுவனம் மருந்துகளின் விவரங்களை வழங்கவும், அதனை வெளியிடுவதையும் விளம்பரப்படுத்துவதையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா மருந்து சிகிச்சை குறித்தான முறையாக அதன் கூறுகள் ஆராயப்படும் வரை இந்த மருந்தினை நிறுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளது.

 

மற்ற செய்திகள்