அயோத்தி நதியில் கணவன் - மனைவி இடையே நடந்த சம்பவம்.. ரவுண்டு கட்டிய பக்தர்கள்.. சர்ச்சையை உண்டு பண்ண வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியாவில் அமைந்துள்ளது சரயு நதி. இது கங்கையின் ஏழு துணை நதிகளில் ஒன்றாகும்.

அயோத்தி நதியில் கணவன் - மனைவி இடையே நடந்த சம்பவம்.. ரவுண்டு கட்டிய பக்தர்கள்.. சர்ச்சையை உண்டு பண்ண வீடியோ

Also Read | "இனிமே அப்பா தேவையில்ல.." திருநங்கையாக மாறிய எலான் மஸ்க் மகன்.. பரபரப்பை ஏற்படுத்திய பின்னணி..

இந்துக்களின் புனிதமான இடமாக கருதப்படும் நிலையில், அங்கு நபர் ஒருவர் செய்த செயலும், அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் செய்ததும் கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. 

இது தொடர்பாக, வீடியோ ஒன்றும் இணையத்தில் அதிகம் வெளியாகி, மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையையும் உண்டு பண்ணி உள்ளது.

முற்றுகையிட்ட வாலிபர்கள்

அந்த வீடியோவில், நபர் ஒருவர் அவரது மனைவியுடன் சரயு நதியில் நீராடிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர்கள் இருவரும் இணைந்து நீராட முற்பட, சுற்றி இருந்தவர்கள் அவர்களை முற்றுகை இடுகின்றனர். அதே போல, தனது மனைவியை அவர் நதியில் வைத்து, முத்தமும் கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, கணவர் மனைவி என கருதப்படும் இருவரையும்  தனித் தனியாக அப்புறப்படுத்தி, அந்த ஆணை அடித்து உதைக்கத் தொடங்குகின்றனர்.

இது போன்ற அசிங்கத்தை அயோத்தியாவில் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறுவதாக தெரிகிறது. இதன் பின்னர், அந்த பெண்ணும் கணவரை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். ஆனால், நிறைய பேர் சூழ்ந்து கொண்டதால், அவரால் முடியாமலும் போகிறது. இறுதியில், இருவரையும் அந்த கும்பல் அப்புறப்படுத்தி அழைத்துச் செல்கிறது.

சர்ச்சையை உண்டு பண்ணிய வீடியோ

இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் பெரிய அளவில் விவாதத்தையும், சர்ச்சையையும் உண்டு பண்ணி உள்ளது. இந்த வீடியோ தொடர்பாக, அயோத்தியா போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி, அந்த வீடியோ கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், அதில் உள்ள தம்பதியினரின் அடையாளம் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல, அந்த தம்பதி புகார் கொடுத்தால் நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றும் அயோத்தியா போலீசார் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அயோத்தி என்பது கடவுள் ராமரின் பிறப்பிடமாக கருதப்படும் நிலையில், அதன் அருகே அமைந்துள்ள சரயு நதியும் இந்துக்களின் புனித நதியாக கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | பெரும் சோகம்.! அறுவை சிகிச்சை செய்த 5வது நாளில் அதிர்ச்சி.. Ex அழகிக்கு பின்னர் நேர்ந்த துயரம்.. !

AYODHYA, AYODHYA MAN, AYODHYA MAN KISSED WIFE IN RIVER

மற்ற செய்திகள்