"5 நிமிடத்தில் 'ரயிலை' சுத்தம் செய்ய முடியுமா?..." "எப்படி முடியும்?..." வீடியோ பாருங்க...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகர ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் தானியங்கி சலவை நிலையம் அமைக்கப்பட்டிருப்பதை ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"5 நிமிடத்தில் 'ரயிலை' சுத்தம் செய்ய முடியுமா?..." "எப்படி முடியும்?..." வீடியோ பாருங்க...

இந்திய ரயில்வே துறை, ரயில்களை சுத்தம் செய்ய பெரும்பாலும் மனித உழைப்பையே நம்பி இருந்தது. இரவும் பகலும் ஏராளமான பணியாளர்கள் ஒன்றிணைந்து ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவர்.

இந்நிலையில் ரயில்வே துறையை நவீனமயமாக்கும் பணிகள் சிறிது சிறிதாக மேற்கொள்ளப்படும் என ரயில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்திருந்தார்.

அதன்படி ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ஏராளமான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரயில்களை சுத்தம் செய்ய தானியங்கி சலவை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சில நிமிடங்களில் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்து விட முடியும்.

 

இதனால், தண்ணீர், நேரம், மனித உழைப்பு என அனைத்தும் சேமிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

KARNATAKA, BANGALURU, WASHING PLANT, PIYUSHGOYAL