நாங்க பிரியுறப்போ அவ ஒரே அழுகை...' 'அத நெனச்சு கூட பார்க்க முடியல...' '50 வருஷம் கழிச்சு லவ் லெட்டர் அனுப்பிய ஆஸ்திரேலிய பெண்மணி...' - வியப்பில் ஆழ்த்தும் காதல் கதை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தானில் பேய் கிராமம் என்று சொல்லப்படும் குல்தாரா கிராமத்தில் இருக்கும் 80 வயது முதியவரின் காதல் கதை கேட்பவரை பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

நாங்க பிரியுறப்போ அவ ஒரே அழுகை...' 'அத நெனச்சு கூட பார்க்க முடியல...' '50 வருஷம் கழிச்சு லவ் லெட்டர் அனுப்பிய ஆஸ்திரேலிய பெண்மணி...' - வியப்பில் ஆழ்த்தும் காதல் கதை...!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டத்தின் மையத்தில் குல்தாரா கிராமம் ஆளில்லாத, வெறிச்சோடி பேய் கிராமம் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது.

குல்தாரா கிராமம் சுமார் 85 குக்கிராமங்களை ஒன்றிணைத்து செயல்பட்டு வந்ததாகவும், 13-ம் நூற்றாண்டில் இருந்தே இந்த கிராமம் இருந்ததாக சில வரலாற்று தகவல்களும் தெரிவிக்கின்றன.

முன்பு வளமாகவும், செழிப்பான கிராமமாக இருந்தாலும், 19 ஆம் நூற்றாண்டில் கிராமவாசிகள் அங்கிருந்து திடீரென மாயமானதாகவும் இதற்கு இயற்கை பேரழிவுகள் மற்றும் உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து துன்புறுத்தல் ஆகியவையே காரணம் என வரலாற்றாசிரியர்களும் விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். ஆனால், உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் மக்கள் காணாமல் போனதற்கு பேய், சாபம் என பல காரணங்களை முன்வைக்கின்றனர்.

தற்போது அந்த ஆளில்லாத பேய் கிராமத்தில் 82 வயதான முதியவர் நுழைவாயில் காவலராக பணியாற்றி வருகிறார். சுமார் 50 ஆண்டுகளாக இந்த குல்தாரா பகுதியை காவல் காப்பதிலேயே கழித்துவிட்டதாகவும் கூறுகிறார். இதுமட்டுமில்லாமல் இவருக்கு ஒரு அழகான நிறைவேறாத காதல் கதையும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, 'எனக்கு 30 வயது இருக்கும் போது, முதன் முதலில் நான் மெரினாவை சந்தித்தேன். 1970ம் ஆண்டு மெரினா ஐந்து நாள் சுற்று பயணத்திற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து ஜெய்சால்மேருக்கும் வந்திருந்தார். அப்போது அவருக்கு நான் ஒட்டகத்தில் சவாரி செய்வது எப்படி என்று நான் கற்றுக் கொடுத்தேன்.

முதல் பார்வையில் காதல் மலரும் என்பது மெரினாவை பார்த்தே தெரிந்துகொண்டேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பினோம். ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு, மெரினா மூன்று மந்திர வார்த்தைகளை என்னிடம், 'ஐ லவ் யூ' என சொன்னாள்.

மெரினா ஆஸ்திரேலியாவுக்குத் சென்ற பின்பும் என்னுடன் பேசுவார், என்னை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்தார். நானும் அவரை சந்திப்பதற்காக விமான பயணத்திற்கு ரூ.30,000 திரட்டி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 3 மாதங்கள் இருந்தேன்.

எங்களின் திருமணம் குறித்து பேசும் போது, எனக்கும் எனது தாய்நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இல்லை. அவள் இந்தியாவுக்கு என்னுடன் வரத் தயாராக இல்லை. இதனால் எங்களின் காதல் இதற்கு மேல் தாக்குப்பிடிக்காது என கூறி இந்தியா வந்தேன்.

அதன்பின் தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன். நான் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய போது மெரினா எவ்வளவு அழுதார் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதுவரை என்னால் அவளை மறக்க முடியவில்லை'

என் குடும்பத்தினர் எனக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக நான் திருமணம் செய்துகொண்டு குல்தாராவில் வேலையை மீண்டும் மேற்கொண்டார். எனக்கு இரு மகன்கள் உள்ளனர்.

                       Australian woman loves 82 yr old Rajasthani old man

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பு, மெரினா தன்னை மீண்டும் கண்டுபிடித்து ஒரு கடிதம் ஒன்றை அனுப்பினார். நாங்கள் சந்தித்த சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் நடந்துள்ளது. அதில், மெரினா விரைவில் இந்தியா திரும்புவதாகவும், தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதையும் அக்கடிதத்தில் வெளிப்படுத்தினார்.

  Australian woman loves 82 yr old Rajasthani old man

எனக்கு அந்த கடிதம் கிடைத்ததிலிருந்து மீண்டும் 21 வயதை அடைந்ததாக உணர முடிகிறது. என்னுடைய காதல் இன்னும் ஆரோக்கியமாகவும், உயிருடன், தொடர்பில் இருக்கிறார் என்ற எண்ணத்தில் திருப்தி அடைகிறேன்' என உணர்வுபூர்வமாக கூறியுள்ளார் 82 வயது ஆக்டோஜெனேரியன் முதியவர்.

மற்ற செய்திகள்